358 ரன்ஸ்.. காயத்துடன் தோனி, ரோஹித்தின் சாதனைகளை தூளாக்கிய ரிஷப் பண்ட்.. இங்கிலாந்தில் புதிய உலக சாதனை

Rishabh Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் 4வது போட்டி மான்செஸ்டர் நகரில் ஜூலை 23ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 94 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் 46, ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடுத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்கள்.

அடுத்து வந்த கேப்டன் கில் 12 ரன்களில் அவுட்டானாலும் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி அரை சதத்தை அடித்து 61 ரன்கள் எடுத்தார். மறுபுறம் அசத்திய ரிஷப் பண்ட் 37 ரன்களில் பாதத்தில் காயத்தை சந்தித்து நடக்க முடியாமல் வண்டியில் ஏறி வேதனையுடன் சென்றார். அதனால் அவர் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

நாட்டுக்காக ரிஷப் பண்ட்:

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ரவீந்திர ஜடேஜா நிதானமாக விளையாட முயற்சித்து 20 ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய சர்துள் தாகூர் சிறப்பாக விளையாடி முக்கியமான 41 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அப்போது தன்னுடைய காயத்தை பொருட்படுத்தாமல் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் களமிறங்கிய அவர் சிங்கிள் எடுக்காமல் பவுண்டரி மட்டும் அடிக்க முயற்சித்தார். எதிர்ப்புறம் நிதானத்தைக் காட்டிய வாசிங்டன் சுந்தர் 27 ரன்னில் அவுட்டானார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய பண்ட் 2 சிக்ஸர் 3 பவுண்டரியுடன் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியாவை 358 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5, ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

புதிய உலக சாதனை:

இந்தப் போட்டியையும் சேர்த்து இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பண்ட் 9வது முறையாக 50+ ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வெளிநாட்டில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை உடைத்து அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இதே இங்கிலாந்தில் தோனி 8 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

இத்துடன் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் அதிக (14) முறை 50+ ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை உடைத்த ரிஷப் பண்ட் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சேனா நாடுகளில் தோனி 13 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் இத்தொடரில் ரிஷப் பண்ட் 5 முறை 50+ ரன்கள் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இத்தனை ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணியில் அரங்கேறிய – அரிதான நிகழ்வு

இதன் வாயிலாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பரூக் இன்ஜினியர் மற்றும் தோனியின் சாதனையை உடைத்துள்ள ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன் தோனி மற்றும் இன்ஜினியர் தலா 4 முறை 50+ ரன்களை அடித்ததே முந்தைய சாதனை. இது போக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையையும் ரிசப் பண்ட் உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரிஷப் பண்ட்: 2730*
2. ரோஹித் சர்மா: 2716
3. விராட் கோலி: 2617

Advertisement