இத்தனை ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணியில் அரங்கேறிய – அரிதான நிகழ்வு

IND
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இந்திய அணி நிகழ்த்திய அரிதான சாதனை :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நேற்று ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதால் இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்ஸ்ஸை விளையாடி வருகிறது.

- Advertisement -

நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்திருந்த வேளையில் இன்று தங்களது இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் ஸ்கோர் 266-ஆக இருந்தபோது 20 ரன்கள் எடுத்திருந்த ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவருக்கு அடுத்து வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். அப்படி வாஷிங்டன் சுந்தர் கமிறங்கியதும் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான ஒரு சாதனையை முதல் முறையாக நிகழ்த்தி அசத்தியுள்ளது. அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணி இந்த போட்டியில் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை இந்திய டெஸ்ட் அணியில் ஐந்து இடது கை பேட்ஸ்மேன்கள் ஒரு இன்னிங்ஸில் இடம் பெற்று விளையாடியது கிடையாது. ஆனால் இந்த போட்டியில் அந்த அரிதான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க : சச்சின், டிராவிட் ஜஸ்ட் மிஸ்.. அசாருதீனின் சாதனையை சமன் செய்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக இடதுகை பேட்ஸ்மேன்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என ஐந்து இடதுகை பேட்ஸ்மேன்கள் பிளேயிங் லெவனில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் மூலம் இந்திய அணி முதல் முறையாக இந்த அரிதான சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement