சச்சின், டிராவிட் ஜஸ்ட் மிஸ்.. அசாருதீனின் சாதனையை சமன் செய்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

Jaiswal and Azharuddin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியானது நேற்று ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

முகமது அசாருதீனின் சாதனையை சமன் செய்த் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :

நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணியானது நான்கு விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணி சார்பாக ஷர்துல் தாகூர் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த நான்காவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்ததன் மூலம் 20 இந்திய வீரராக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அப்படி ஜெய்ஸ்வால் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் 107 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை அடித்த இருபதாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தினார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த முகமது அசாருதீன் சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். முகமது அசாருதீன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 16 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட காயத்தால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் இஷான் கிஷனுக்கு அடித்துள்ள ஜாக்பாட் – விவரம் இதோ

இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தலா 15 இன்னிங்ஸ்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 1000 டெஸ்ட் ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement