இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மூன்றாவது போட்டியின் போது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நான்காவது போட்டியில் விளையாடுவாரா? என்ற அச்சம் இருந்தது.
இஷான் கிஷனுக்கு அடித்துள்ள ஜாக்பாட் :
ஆனால் நான்காவது போட்டி துவங்குவதற்கு போதுமான இடைவெளி இருந்ததால் அந்த காயத்திலிருந்து விடுபட்ட ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் பேப்பர் பேட்ஸ்மேனாக இடம்பெற்று விளையாடி வருகிறார்.
இருப்பினும் இந்த போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் 48 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 37 ரன்கள் அடித்திருந்த வேளையில் அவர் மீண்டும் கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அவரது இந்த காயத்திற்கான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் வெளியான அறிக்கையில் அவரது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அடுத்த ஆறு வாரத்திற்கு அவரால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் எஞ்சியுள்ள தொடரிலிருந்து வெளியேறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக இந்த போட்டியில் மாற்று வீரராக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக எதிர்வரும் ஜூலை 31-ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது ஒரு கீப்பரை சேர்த்தாக வேண்டிய கட்டாயம் இந்திய அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த எஞ்சியுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக இஷான் கிஷன் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி இருந்த அவர் அதன்பின்னர் இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி டெஸ்ட் வாய்ப்புகள் காத்திருக்கிறார்.
இதையும் படிங்க : காயமடைந்த ரிஷப் பண்ட்க்கு பதிலாக துருவ் ஜுரேல் பேட்டிங் செய்ய முடியுமா? – ரூல்ஸ் கூறுவது என்ன?
இவ்வேளையில் சமீபத்தில் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டிலும், இந்திய ஏ அணிக்காக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் அவர் விளையாடி இருந்ததால் எஞ்சியுள்ள கடைசி ஒரு போட்டிக்கு அவர் கூடுதல் விக்கெட் கீப்பராக இணைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



