4464 நாட்கள் கழித்து இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை.. பெரிய தலைகள் இல்லாமல் சாதிக்குமா?

Virat Jadeja and KL Rahul
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் ஏமாற்ற தோல்வியை சந்தித்தது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை வகித்த இந்தியா கையில் வைத்திருந்த வெற்றியை இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இங்கிலாந்துக்கு தாரை வார்த்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இருப்பினும் அதிலிருந்து பாடத்தை கற்றுள்ள இந்தியா அடுத்ததாக விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கும் 2வது போட்டியில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது. இருப்பினும் அந்தப் போட்டியில் கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 2 முக்கிய வீரர்கள் காயத்தால் விலங்கியுள்ளது இந்திய அணிக்கு பெரிய அடியை கொடுத்துள்ளது.

- Advertisement -

பெரிய தலைகள் இல்லாமல்:
ஏனெனில் கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய கேஎல் ராகுல் 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி சமீபத்திய தென்னாப்பிரிக்க தொடரில் சதமடித்து தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதே போல பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அசத்தக்கூடிய ரவீந்திர ஜடேஜா இல்லாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

அதற்கு முன்பாக விராட் கோலி ஏற்கனவே தன்னுடைய சொந்த காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். அத்துடன் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், கில் போன்ற இளம் வீரர்கள் சொதப்பிய போது புஜாரா, ரகானே போன்ற சீனியர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்ததாக அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் போன்ற சில முன்னாள் வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

- Advertisement -

மொத்தத்தில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, புஜாரா அல்லது ரகானே ஆகிய 4 முக்கிய வீரர்கள் இல்லாமல் 4464 நாட்கள் கழித்து இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. குறிப்பாக கடந்த 12 வருடம் 6 மாதங்களில் கழித்து 119 டெஸ்ட் போட்டிகளுக்கு பின் முதல் முறையாக ஒரு போட்டியில் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இல்லாமல் இந்தியா விளையாடப் போகிறது. கடைசியாக இந்தியா விளையாடிய 119 டெஸ்ட் போட்டிகளிலும் இந்த 4 வீரர்களில் யாராவது ஒருவர் இருந்தனர்.

இதையும் படிங்க: அவங்க 2 பேரும் நிச்சயமா ரன்ஸ் அடிப்பாங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க – பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் ஆதரவு

எடுத்துக்காட்டாக 2021 காபா டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்த போது கூட ரகானே கேப்டனாக விளையாடியிருந்தார். கடைசியாக இந்த நால்வரில் ஒருவர் கூட இல்லாமல் கடந்த 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா விளையாடியது. மொத்தத்தில் விசாகப்பட்டினம் போட்டியில் முக்கிய தலைகள் இல்லாமல் இந்தியா சாதிக்கும் முனைப்புடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement