- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மறுபடியுமா? ஐசிசி 2024 மகளிர் டி20 உ.கோ இந்திய அணியை வெளியிட்ட பிசிசிஐ.. ரசிகர்கள் ஏமாற்றம்

ஐசிசி 2024 உலகக் கோப்பை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு நாடுகளில் ஐசிசி மகளிர் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 4 முதல் 20 வரை சார்ஜா மற்றும் துபாயில் நடைபெற உள்ள அத்தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளன.

அந்தத் தொடருக்கான அட்டவணையை நேற்று ஐசிசி வெளியிட்டது. அதில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் உள்ள குரூப் ஏ பிரிவில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்டோபர் 4, 6, 9, 13 ஆகிய தேதிகளில் முறையே நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்திய அணி அறிவிப்பு:

இந்நிலையில் அத்தொடரில் விளையாட உள்ள இந்திய அணியை பிசிசிஐ தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளது. அந்த அணிக்கு மீண்டும் ஹர்மன்ப்ரீத் கௌர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும்பாலான இந்திய ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் பேட்டிங்கில் தடுமாறும் அவருடைய தலைமையில் ஏற்கனவே இந்தியா 2020 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்தது.

அத்துடன் 2022 காமன்வெல்த் தொடரின் இறுதிப்போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஃபைனலில் ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்டானார். அதனால் கைக்கு கிடைத்த தங்கப்பதக்கத்தை கோட்டை விட்ட இந்தியா கடைசியில் வெள்ளிப்பதக்கம் மட்டுமே வென்றது. அதை விட சமீபத்தில் இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் முக்கிய கேட்ச்சை தவறவிட்ட ஹர்மன்பிரீத் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானார்.

- Advertisement -

கேப்டனாக ஹர்மன்ப்ரீத்:

அதனால் 2024 மகளிர் ஐபிஎல் கோப்பையை வென்ற மந்தனாவை கேப்டனாக அறிவித்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும். இருப்பினும் ஹர்மன்ப்ரீத் தலைமையிலான மந்தனா துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஷபாலி வர்மா, தீப்தி சர்மா ஜெமிமா, தமிழக வீராங்கனை ஹேமலதா ஆகியோர் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: எனக்கு டி20 மட்டும் போதாது.. அந்த பார்மேட்லயும் எனக்கு கிரிக்கெட் விளையாட ஆசை – சூரியகுமார் யாதவ் விருப்பம்

2024 டி20 மகளிர் உலகக்கோப்பை இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் ஹௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், ரிச்சா கோஸ் (கீப்பர்), யஸ்டிக்கா பாட்டியா (கீப்பர்), பூஜா வஸ்திரகர் அருந்ததி ரெட்டி ரேணுகா தாகூர், தயாளன் ஹேமலதா, ஆசா ஷோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டில், சஞ்சனா சஞ்சீவன். ரிசர்வ்: உமா சேத்ரி (கீப்பர்), தனுஜா கன்வெர், சைமா தாகூர், ராகவி பிஸ்த், பிரியா மிஸ்ரா

- Advertisement -