எனக்கு டி20 மட்டும் போதாது.. அந்த பார்மேட்லயும் எனக்கு கிரிக்கெட் விளையாட ஆசை – சூரியகுமார் யாதவ் விருப்பம்

SKY
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரும், டி20 கிரிக்கெட்டின் கேப்டனுமான சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை உலகின் நம்பர் 1 வீரராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மைதானத்தின் அனைத்து புறமும் பவுலர்களை வெளுத்து வாங்கும் சூரியகுமார் யாதவிற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த அளவிற்கு அவர் வான வேடிக்கையை நிகழ்த்தக்கூடியவர்.

டெஸ்ட் அணியில் விளையாடனும் :

டி20 போட்டிகளில் என்னதான் இவர் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு பெரியளவில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஒருநாள் போட்டிகளில் கடந்த ஆண்டு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் அதில் சோபிக்க தவறிய அவர் அதன் பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து கழட்டி விடப்பட்டார்.

- Advertisement -

தற்போது டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாட கவனத்தை செலுத்தி வருகிறார். குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கும் முனைப்புடன் கடினமாக உழைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது உள்ளூர் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவ் விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்தை உறுதி செய்யும் வகையில் விளையாட விரும்புவதாக அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய டெஸ்ட் அணியில் ன்னுடைய இடத்தை உறுதி செய்யும் வகையில் விளையாட விரும்புகிறேன். கடினமாக உழைத்து டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க போகிறேன். இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இதையும் படிங்க : அதை கேட்க பயப்பட்டேன்.. விராட் கோலியிடம் அந்த விஷயத்தை எல்லோரும் கத்துக்கலாம்.. ரிங்கு பேட்டி

நான் டெஸ்ட் போட்டிகளில் முன்பே அறிமுகமாகி இருந்தாலும் என்னால் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது. எதிர்வரும் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க முயற்சிப்பேன் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement