சும்மா இருக்கும் அவரை முத்தையா முரளிதரனா மாத்திடாதீங்க.. இந்திய அணியை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 8
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது. ஹைதராபாத் நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை விட ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஓலி போப் 196 ரன்கள் குவித்ததை பயன்படுத்திய இங்கிலாந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை நான்காவது நாளில் சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் சேசிங் செய்ய முடியாத இந்தியா 202 ரன்களுக்கு சுருண்டு சொந்த மண்ணில் பரிதாப தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் அடுத்ததாக நடைபெறும் போட்டியில் தங்களுடைய பலமான சுழலை வைத்து இங்கிலாந்தை சாய்க்கலாம் என்ற எண்ணத்துடன் சுழலுக்கு அதிக சாதகமாக இருக்கக்கூடிய பிட்ச்சை இந்தியா அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

- Advertisement -

அது வேண்டாம்:
ஆனால் அவ்வாறு செய்வது கடைசியில் நமக்கே மீண்டும் தோல்வியை கொடுக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். மேலும் அது போன்ற மைதானத்தை அமைப்பது டாம் ஹார்ட்லி, ஜோ ரூட் போன்ற அனுபவமற்ற இங்கிலாந்து ஸ்பின்னர்களை கூட பிஷன் பேடி, முத்தையா முரளிதரன் போல செயல்பட வைக்கும் எனக் கூறும் அவர் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்ருமாறு.

“தங்கள் மீது சந்தேகத்துடன் இருக்கும் பிரச்சினை இந்திய அணியில் இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கில் ஆகியோர் சுமாரான ஃபார்மில் உள்ளனர். அடுத்த போட்டியில் நம்மிடம் ராகுல் இல்லை. விராட் கோலி விளையாட மாட்டார். ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடப் போவதில்லை. அதனால் திடீரென நீங்கள் சிக்கியுள்ளீர்கள். எனவே இந்தியா நல்ல பிட்ச்சில் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன்”

- Advertisement -

“அவர்கள் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் விளையாடுவதற்கு ஆர்வத்தை காட்டக்கூடாது. ஏனெனில் உங்களுடைய பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இல்லை. மேலும் அது போன்ற சூழ்நிலையில் 2 அணியின் ஸ்பின்னர்களும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இத்தனைக்கும் இங்கிலாந்து அணியில் துல்லியமாக வீசக்கூடிய ஸ்பின்னர்கள் இல்லை”

இதையும் படிங்க: ஈஸியா அடிக்க ஃபிளாட்டான பிட்ச் கிடைக்காது.. சீக்கிரம் முன்னேறுங்க.. இந்திய வீரருக்கு கைப் அட்வைஸ்

“ஆனாலும் நீங்கள் சுழலுக்கு சாதகமான மைதானத்தை கொடுத்தால் அதில் டாம் ஹார்ட்லி பிஷன் பேடியாகவும் ஜோ ரூட் முத்தையா முரளிதரனாகவும் உருவெடுப்பார்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டிலாவது இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா தங்களின் தரத்தை நிரூபித்து தொடரை சமன் செய்யுமா என்ற எதிர்ப்பதற்கு ரசிகர்களிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement