ஈஸியா அடிக்க ஃபிளாட்டான பிட்ச் கிடைக்காது.. சீக்கிரம் முன்னேறுங்க.. இந்திய வீரருக்கு கைப் அட்வைஸ்

Mohammed Kaif 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. ஏனெனில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்தை விட சிறப்பாக விளையாடிய இந்தியா ஆரம்பத்தில் 190 ரன்கள் முன்னிலையில் இருந்தது. அதனால் கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்விக்கு பேட்டிங் துறையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. சொல்லப்போனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் இவர்கள் டெஸ்ட் போட்டிகளில் சமீபகலாகவே தடுமாறி வருகிறார்கள். குறிப்பாக கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்த சுப்மன் கில் கடைசி 17 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் திணறி வருகிறார்.

- Advertisement -

ஃபிளாட்டான பிட்ச் கிடைக்காது:
எனவே அவரை நீக்கிவிட்டு சர்பராஸ் கான், ரஜத் படிதார் போன்ற இதர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதற்கு உதவும் ஃபிளாட்டான பிட்ச்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து நேரங்களிலும் கிடைக்காது என்பதை சுப்மன் கில் உணர வரவேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனால் அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்துவதற்கு தேவையான மாற்றங்களை அவர் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கும் கைப் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்ருமாறு. “சுப்மன் கில் திறமையான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வெள்ளைப் பந்து அவர் அசத்தக்கூடிய ஃபிளாட்டான பிட்ச்கள் சர்வதேச கிரிக்கெட்டில் குறைவாகவே இருக்கும்”

- Advertisement -

“டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களுக்கு ஃபிளாட்டான பிட்ச்கள் கிடைக்காது. அதில் பெரும்பாலான மைதானங்களில் பந்து சுழலும், பவுன்ஸ் ஆகும். எனவே கில் அதற்கு தகுந்தார் போல் தன்னுடைய ஃபுட் வொர்க்கில் தேவையான மாற்றங்களை செய்து மீண்டும் ரன்கள் அடிப்பதற்கான வேலையை செய்ய வேண்டும். இத்தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் நல்ல துவக்கத்தை பெற்றனர்”

இதையும் படிங்க: எதையும் நம்பாதீங்க ப்ளீஸ்.. விராட் கோலி விலகலுக்கு காரணம் இதுதான்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கோலியின் சகோதரர்

“ஆனால் பொறுமையுடன் விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் களத்தில் நின்று சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும். எனவே இதைப் பற்றி அணி வீரர்களிடம் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுவார் என்று நான் நம்புகிறேன்” என கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement