எதையும் நம்பாதீங்க ப்ளீஸ்.. விராட் கோலி விலகலுக்கு காரணம் இதுதான்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கோலியின் சகோதரர்

Kohli
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பிடித்திருந்தார். ஆனால் இந்த டெஸ்ட் தொடரானது ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக தான் அணியிலிருந்து வெளியேறுவதாக கூறி ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு அணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறி இருந்தார்.

அந்தவகையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் இடப்பெற்று விளையாடவில்லை என்றாலும் நிச்சயம் எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளில் அவர் அணிக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படி விராட் கோலி இந்திய அணியில் இருந்து திடீரென விலகியதால் அவரது விலகல் குறித்த பல்வேறு வதந்திகள் சமூக வலைதளத்தில் இருந்து வந்தன. அந்த வகையில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாகவும் அதன் காரணமாக அவர் விளையாடவில்லை என ஒரு சிலர் கூறிவந்தனர்.

அதேபோன்று மற்றொரு தரப்பினை சேர்ந்த ஒரு சிலர் அவரது தாய்க்கு உடல் நலம் சரியில்லை என்றும் சில வதந்திகளை சமூக வலைதளத்தின் மூலம் பரப்பி வந்தனர். இந்நிலையில் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விராட் கோலியின் சகோதரர் ஒரு கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதன்படி அவர் கூறுகையில் : என்னுடைய தாயின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்தி எதுவுமே உண்மை கிடையாது. எனது தாய் நலமாக உள்ளார். விராட் கோலி தனிப்பட்ட முறையிலேயே அவரது முடிவை எடுத்துள்ளார். மக்கள் மற்றும் ஊடகங்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இன்னும் இந்திய அணி 2023 மூட்லயே இருக்காங்க.. விராட் கோலி சீக்கிரம் வரணும்.. முகமது கைப் கவலை

விராட் கோலி அணியில் இல்லாத இவ்வேளையில் இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement