டி20 உலககோப்பைக்கு முன்பாக இந்தியா பங்கேற்கும் 3 புதிய கிரிக்கெட் தொடர்கள் அறிவிப்பு, எங்கே – எப்போது, முழு அட்டவணை இதோ

Ind-2
- Advertisement -

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீசுக்கு பறந்துள்ள இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 22-ஆம் தேதியன்று துவங்குகிறது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்தியா களமிறங்குகிறது. அது தொடர்ந்து நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் தினேஷ் கார்த்திக், அஸ்வின், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் விளையாட உள்ளனர்.

IND vs ENG TEam INDIA

- Advertisement -

ஜூலை 29இல் துவங்கும் அந்த தொடர் வரும் ஜூலை 7-ஆம் தேதியுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து தாயகம் திரும்பும் இந்தியா 10 நாட்கள் இடைவெளிக்கு பின்பு ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெறும் அந்தத் தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட 2-வது தர இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தொடர்கள்:
அந்த தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பும் இந்தியா புகழ்பெற்ற ஆசிய கோப்பையில் வரும் 27 ஆகஸ்டு முதல் 11 செப்டம்பர் வரை பங்கேற்க உள்ளது. இந்த தொடர் இலங்கையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதனால் இந்த தொடர் துபாய்க்கு மாற்றப்படும் என்று சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். அந்த ஆசிய கோப்பைக்கு பின் அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையில் 24-ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை இந்தியா தனது முதல் போட்டியில் சந்திக்க உள்ளது.

Team India Jasprit Bumrah

இந்த நிலைமையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் அட்டவணையின்படி ஆசிய கோப்பைக்கு பின்பு டி20 உலகக் கோப்பையில் இந்தியா பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அதற்கிடையே 40க்கும் மேற்பட்ட நாட்கள் இடைவெளி இருப்பதால் அந்த நாட்களில் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் தற்போது புதிதாக 3 கிரிக்கெட் தொடர்களுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

- Advertisement -

ஆஸ்திரேலிய தொடர்:
குறிப்பாக கடந்த வருடம் முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று உலக சாம்பியனாக திகழும் வலுவான ஆஸ்திரேலியாவை உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா எதிர்கொள்ள பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. அதேப்போல் ஆஸ்திரேலியாவும் தங்களது சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்காகவே இந்தியா போன்ற வலுவான அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள சம்மதித்துள்ளது.

Ind-vs-aus-1

அந்த வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அட்டவணை இதோ:
முதல் டி20, செப்டம்பர் 20, மொஹாலி
2-வது டி20, செப்டம்பர் 23, நாக்பூர்
3-வது டி20, செப்டம்பர் 25, ஹைதெராபாத்

- Advertisement -

தென்ஆப்பிரிக்க தொடர்:
ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட பின் மீண்டும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்பது. கடைசியாக இவ்விரு அணிகளும் கடந்த ஜூலை மாதம் இந்திய மண்ணில் மோதிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அத்துடன் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக கடைசி தொடராக அதே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் இந்தியா களமிறங்குகிறது.

INDvsRSA

இந்த 2 தொடர்களுமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிட உள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதும் டி20 தொடருக்கான அட்டவணை இதோ:
முதல் டி20, செப்டம்பர் 28, திருவனந்தபுரம்
2-வது டி20, அக்டோபர் 1, கௌகாத்தி
3-வது டி20, அக்டோபர் 3, இந்தூர்

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடருக்கான அட்டவணை இதோ:
முதல் ஒருநாள் போட்டி, அக்டோபர் 6, ராஞ்சி
2-வது ஒருநாள் போட்டி, அக்டோபர் 9, லக்னோ
3-வது ஒருநாள் போட்டி, அக்டோபர் 11, டெல்லி

Advertisement