397 ரன்ஸ்.. நியூஸிலாந்தையே பொளந்து நியூஸிலாந்தின் சாதனையை உடைத்த இந்தியா.. மாபெரும் புதிய உலக சாதனை

Advertisement

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 15ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பையில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சந்தித்தன. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்.

குறிப்பாக 4 பவுண்டரி 4 சிக்சருடன் அதிரடியாக 47 (29) ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தை கொடுத்து அவுட்டான அவருக்கு அடுத்தபடியாக வந்த விராட் கோலி தம்முடைய ஸ்டைலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் ரோஹித் அவுட்டான பின் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் வேகமாக ரன்களை குவித்ததால் சதத்தை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79* (65) ரன்களில் மும்பை நிலவிய அதிகப்படியான வெப்பத்தால் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

இந்தியாவின் சாதனை:
அந்த நிலைமையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடிய நிலையில் மறுபுறம் நியூசிலாந்து பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறிய விராட் கோலி 9 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 117 (113) ரன்கள் விளாசி ஆட்டமிழருந்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை முந்தி 50 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை விராட் கோலி படைத்தார்.

அது போக இந்த உலகக்கோப்பையில் 700 ரன்கள் அடித்துள்ள விராட் கோலி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (2003இல் 673 ரன்கள்) வாழ்நாள் சாதனையை உடைத்து அவருக்கு தலைவணங்கி பெவிலியன் திரும்பினார். ஆனால் அவருக்கு பின் வந்து அவரை விட அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் டெத் ஓவர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி 8 சிக்சருடன் தம்முடைய பங்கிற்கு சதமடித்து 105 (70 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் கேஎல் ராகுல் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி 2 சிக்சருடன் 39* (20) ரன்கள் எடுத்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 50 ஓவர்களில் இந்தியா 397/4 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு நாக் அவுட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற நியூசிலாந்தின் சாதனையை உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: 50இல் 50.. யாராலும் முடியாத சச்சினின் 20 வருட சரித்திரத்தை உடைத்து தலை வணங்கிய கிங் கோலி.. 4 புதிய உலக சாதனை

இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2015 உலகக் கோப்பையில் நியூசிலாந்து 393/6 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் 2019 செமி ஃபைனலில் தோல்வியை பரிசளித்த நியூசிலாந்தை மும்பையில் பொளந்த இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்துள்ளதால் நிச்சயம் இம்முறை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement