- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 முறை 3 சதம்.. வெ.இண்டீஸை பந்தாடிய ராகுல், ஜடேஜா, ஜுரேல்.. 2007க்குப்பின் இந்தியா அரிதான சாதனை

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் அக்டோபர் 2ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4, ஜஸ்ப்ரித் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜெய்ஸ்வால் 36 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த சாய் சுதர்சன் 7 ரன்னில் அவுட்டான போதிலும் மறுபுறம் அசத்திய கேஎல் ராகுல் அரை சதத்தை அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சுப்மன் கில் மூன்றாவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 50 ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

மறுபுறம் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை நேர்த்தியாக எதிர்கொண்ட ராகுல் 2016க்குப்பின் இந்திய மண்ணில் தனது டெஸ்ட் சதத்தை அடித்து 100 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த துருவ் ஜுரேல் – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நங்கூரமாக விளையாடினர். அவர்களைப் பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் திணறியது.

அதைப் பயன்படுத்திய அந்த ஜோடி 206 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை அடித்தது. அதில் தம்முடைய முதல் டெஸ்ட் சதத்தை அடித்த துருவ் ஜுரேல் 125 (210) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜாவும் சதத்தை அடித்து அசத்தினார். அப்போது நிறைவுக்கு வந்த 2வது நாள் ஆட்ட நேர முடிவு இந்தியா 448/5 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

2007க்குப்பின் அரிதான நிகழ்வு:

அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 286 ரன்கள் குவித்துள்ள இந்திக்க இப்போட்டியில் வலுவான துவக்கத்தைப் பெற்றுள்ளது. களத்தில் ஜடேஜா 104*, சுந்தர் 9* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் லீட்ஸ் முதல் போட்டியில் இந்தியாவுக்காக ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதத்தை அடித்தனர். அதே தொடரில் மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது போட்டியில் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா வாஷிங்டன் சுந்தர் சதமடித்தனர்.

இதையும் படிங்க: தல தோனியின் சாதனையை தகர்த்து டெஸ்ட் போட்டிகளில் அற்புதம் நிகழ்த்திய ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

அதைத்தொடர்ந்து தற்போது இந்தப் போட்டியில் ராகுல், ஜுரேல், ஜடேஜா ஆகியோர் இந்தியாவுக்காக சதத்தை எடுத்துள்ளனர். இதன் வாயிலாக வரலாற்றில் 4வது முறையாக ஒரே வருடத்தில் 3 முறை ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் இந்தியா 3 சதங்கள் அடித்த அரிதான நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதற்கு முன் 1979, 1986, 2007 ஆகிய வருடங்களிலும் 3 முறை ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் இந்தியா 3 சதங்கள் அடித்துள்ளது.

- Advertisement -