- Advertisement -
இந்திய கிரிக்கெட்

283 ரன்ஸ்.. 23 சிக்ஸ்.. தெ.ஆ அணியை சூறையாடிய சாம்சன் – வர்மா.. இந்தியா இரட்டை உலக சாதனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தன்னுடைய சொந்த மண்ணில் இந்தியா 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் மூன்று போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் நான்காவது போட்டி நவம்பர் 15ஆம் தேதி ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து தம்முடைய பங்கிற்கு 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 36 (18) ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா 5.5 ஓவரிலேயே 73 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு அபார துவக்கத்தை கொடுத்து அவுட்டானார்.

- Advertisement -

நொறுக்கிய இந்தியா:

அடுத்து வந்த திலக் வர்மா தம்முடைய பங்கிற்கு தென்னாப்பிரிக்கா பவுலர்களை வெளுத்து வாங்கினார். கடந்த போட்டியில் சதம் அடித்த அவர் இந்த போட்டியிலும் அதே ஃபார்மில் சுமாராக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கினார். அவருடன் சேர்ந்து சாம்சன் தம்முடைய பங்கிற்கு வெறித்தனமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

அந்த வகையில் ஒவ்வொரு ஓவருக்கும் 10க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த இந்த ஜோடி ரசிகர்களுக்கு விருந்து படைத்து அரை சதம் அடித்தது. நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 100க்கும் மேற்பட்ட ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பட்டைய கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதற்கிடையே அவர்கள் கொடுத்த சில கேட்ச்களை தென்னாப்பிரிக்க வீரர்கள் கோட்டை விட்டார்கள்.

- Advertisement -

இரட்டை உலக சாதனை:

அதை பயன்படுத்தி பட்டாசாக விளையாடிய அந்த ஜோடியில் இருவருமே சதமடித்து அசத்தினார்கள். இறுதியில் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய அந்த ஜோடியில் சஞ்சு சாம்சன் 6 பவுண்டரி 9 சிக்ஸருடன் 109* (56) ரன்களும் திலக் வர்மா 9 பவுண்டரி 10 சிக்ஸருடன் 120* (47) ரன்களும் விளாசினார். நாள் தென்னாப்பிரிக்காவில் சூறையாடிய இந்தியா 20 ஓவரில் 283-1 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க: முதல் ஆஸி போட்டியில் அஸ்வின் வேண்டாம்.. ஜடேஜாவை தேர்ந்தெடுக்க இதான் காரணம்.. சாஸ்திரி பேட்டி

அதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 258-5 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் (23) அடித்த அணியாகவும் இந்தியா உலக சாதனை படைத்தது. இதற்கு முன் வங்கதேசத்துக்கு எதிராக கடந்த மாதம் இந்தியா 22 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -