முதல் ஆஸி போட்டியில் அஸ்வின் வேண்டாம்.. ஜடேஜாவை தேர்ந்தெடுக்க இதான் காரணம்.. சாஸ்திரி பேட்டி

Ravi Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சந்தித்த தோல்வியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல அத்தொடரில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது. அதற்காக இந்திய அணியினர் தயாராகி வருகிறார்கள்.

முன்னதாக ஆஸ்திரேலியாலில் பொதுவாகவே வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருப்பது வழக்கமாகும். அதனால் அங்கு ஒரு ஸ்பின்னர் மட்டுமே விளையாடுவது வாடிக்கையாகும். அது போன்ற சூழ்நிலையில் கடந்த காலங்களில் இந்திய அணி நம்பர் ஒன் ஸ்பின்னராக இருந்தும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை தேர்ந்தெடுத்துள்ளது.

- Advertisement -

அஸ்வின் – ஜடேஜா:

ஏனெனில் அஸ்வினை விட பேட்டிங்கில் ஜடேஜா திறமையான வீரராக இருக்கிறார். அத்துடன் அஸ்வினை விட அவர் ஃபீல்டிங் செய்வதிலும் வேகமாக செயல்படக் கூடியவர். இந்நிலையில் அதே காரணத்தால் இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை ஸ்பின்னராக இந்தியா தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“நான் ஒரு ஸ்பின்னரை மட்டும் தேர்ந்தெடுப்பேன். கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக பெர்த் நகரில் ஆஸ்திரேலியா விளையாடிய போட்டியில் நானும் இருந்தேன். அது போன்ற சூழ்நிலையில் 2 ஸ்பின்னர்கள் இருப்பது உங்களுக்கு வசதியை கொடுக்கும். அந்த மைதானத்தில் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவை இருக்கும். அதைப் பயன்படுத்தி எதிரணி பேட்ஸ்மேன் மீது அழுத்தத்தை போடும் பவுலர் உங்களுக்கு தேவை”

- Advertisement -

சாஸ்திரி தேர்வு:

“ஏனெனில் ஸ்பின்னர்களை நீங்கள் அவ்வப்போது பயன்படுத்துகிறீர்கள். இருப்பினும் நான் பயிற்சியாளராக இருந்த போது இது எப்போதும் கடினமான தேர்வாக இருந்தது. அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது எனக்கு கடினமாக இருந்தது. இருப்பினும் தற்போதைய ஃபார்மை நீங்கள் பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: விராட் கோலி மட்டுமே அதை சம்பாதிச்சுருக்காரு.. அதான் ரோஹித்தை ஆஸ்திரேலியா கண்டுக்கல.. ஆகாஷ் சோப்ரா

“அது போன்ற சூழ்நிலையில் ஜடேஜா பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் ஆகியவற்றில் சிறந்த செயல்பாடுகளை மேஜையில் கொண்டு வருவார். அதுவே வெளிநாட்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பை அதிகரிக்கிறது. அதற்கு முன்பாக நீங்கள் அவர் வலைப்பயிற்சியில் எந்தளவுக்கு ஃபார்மில் இருக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்” என கூறினார். அவர் கூறுவது போல இம்முறையும் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது..

Advertisement