
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓவல் மைதானத்தில் ஜூலை 31ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த ராகுல் 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த கேப்டன் இல் 21 ரன்னில் ரன் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏமாற்றத்தைக் கொடுத்தார். 3வது இடத்தில் நிதானமாக விளையாட முயற்சித்த சாய் சுதர்சன் 38 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா 9 ரன்னில் நடையைக் கட்டினார்.
அதனால் இந்தியா தடுமாறிய போது கருண் நாயர் நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த துருவ் ஜுரேல் 19 ரன்களில் அவுட்டானார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய கருண் நாயர் அரை சதத்தை அடித்ததால் பெரிய ஸ்கோர் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது நாள் ஆட்டத்தில் அவர் 57 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்.
அடுத்த சில ஓவரில் மறுபுறம் கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தரும் 26 ரன்னில் அவுட்டானார். இறுதியில் சிராஜ், கிருஷ்ணா அடுத்தடுத்து டக் அவுட்டானதால் இந்தியா வெறும் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக இப்போட்டியில் 2வது நாளில் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் தலையில் பிரத்தியேகமாக ஹெட்பேண்ட் அணிந்து கொண்டு விளையாடினார்கள்.
அதற்கான காரணம் என்னவெனில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரகாம் தோப் 54 வயதில் இயற்கை எய்தினார். 1993 – 2005 வரையிலான காலகட்டங்களில் இங்கிலாந்துக்காக அவர் 100 டெஸ்ட் 82 ஒருநாள் போட்டிகளில் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 9000+ ரன்களை அடித்து நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் பெரும்பாலும் பேட்டிங் செய்யும் போது தலையில் ஹெட் பேண்ட் அணிந்து விளையாடி இங்கிலாந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்
இதையும் படிங்க: மூன்றாவது இந்திய வீரராக இங்கிலாந்து மண்ணில் கே.எல் ராகுல் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
1969 ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்த அவர் 2024 ஆகஸ்ட் 4ஆம் தேதி இயற்கை எய்தினார். அதனாலேயே அவருடைய பிறந்தநாளில் அவரைப் போலவே இங்கிலாந்து அணியினர் மற்றும் ரசிகர்கள் ஹேண்ட்பேண்ட் அணிந்து அவரை கௌரவித்து நினைவு செலுத்தினார்கள். இன்றைய நாள் போட்டியை தோப் அவர்களின் மனைவி அமான்டா மகள் எம்மா ஆகியோர் ஓவல் மைதானத்தின் பாரம்பரிய மணியை அடித்து துவங்கி வைத்தனர். ஆகஸ்ட் 1ஆம் தேதி இங்கிலாந்து கிரிக்கெட்டில் மன ஆரோக்கிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது.