188 ரன்ஸ்.. ஓமன் போட்டியில் சூரியகுமார் செய்த தியாகம்.. தோனி, பண்ட் கூட செய்யாத சாதனை படைத்த சாம்சன்

Sanju Samson
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 19ஆம் தேதி அபுதாபியில் கடைசி லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா ஏற்கனவே வெளியேறிய ஓமனை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே திணறிய சுப்மன் கில் 5 (8) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். எதிர்ப்புறம் அதிரடியாக முயற்சித்த அபிஷேக் சர்மா 38 (15) ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தைக் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

சாம்சன் சாதனை:

அப்போது களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சூரியகுமார் யாதவ் தம்முடைய இடத்தை ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கினார். அந்த வாய்ப்பில் பாண்டியா துரதிஷ்டவசமாக ஒரு ரன்னில் ரன் அவுட்டாகி சென்றார். அடுத்து வந்த அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாட முயற்சித்து 26 (13) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த சிவம் துபே 5 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். அதனால் மறுபுறம் நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட சாம்சன் அரை சதத்தை அடித்து 56 (45) ரன்களில் அவுட்டானார். இதன் வாயிலாக ஆசிய கோப்பை டி20 வரலாற்றில் அரை சதத்தை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

- Advertisement -

களமிறங்காத கேப்டன்:

இதற்கு முன் 2016, 2022 ஆசியக் கோப்பை டி20 தொடர்களில் தோனி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் கூட அரை சதம் அடித்ததில்லை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் லோயர் ஆர்டரில் களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 29 (18) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ஹர்ஷித் ராணா 13* (8) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இந்தியா 188/8 ரன்களை எடுத்தது.

இதையும் படிங்க: இதனால தான் விராட் கோலி.. இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் சிறந்த பிளேயர் மனிதர்.. அமீர் பாராட்டு

கடைசி வரை கேப்டன் சூரியகுமார்  பேட்டிங் செய்யாமல் தம்முடைய இடத்தை மற்ற வீரர்களுக்கு கொடுத்தார். குறிப்பாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்பாக ஓமன் போன்ற கத்துக் குட்டிக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் பலத்தை சோதிக்க அவர் அந்த முயற்சியை செய்தார் என்றே சொல்லலாம். ஓமன் அணிக்கு ஜித்தன் ரமணடி, அமைர் கலீம், ஷா பசல் தலா 2 எடுத்தனர்.

Advertisement