- Advertisement -
இந்திய கிரிக்கெட்

78/4 டூ 175/6 ரன்ஸ்.. கம்பேக்கில் மாஸ் காட்டிய பாண்டியா.. இந்தியாவுக்காக 23 வயதில் திலக் வர்மா சாதனை

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 5 டி20 கிரிக்கெட் தொடர் டிசம்பர் 9ஆம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

அடுத்ததாக வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் தடுமாற்றமாக விளையாடி 12 (11) ரன்னில் லுங்கி நிகிடி வேகத்தில் பெவிலியன் என்று திரும்பினார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் நிதானமாக விளையாடி அபிஷேக் ஷர்மாவும் 17 (12) ரன்னில் அவுட்டானதால் 48/3 என இந்தியா தடுமாறியது. அப்போது நங்கூரமாக விளையாட முயற்சித்த திலக் வர்மா 26 (32) ரன்களில் அவுட்டாகி பின்னடைவையே கொடுத்தார்.

- Advertisement -

பாண்டியா மாஸ் ஆட்டம்:

ஆனால் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாக பேட்டிங் செய்து ரன்கள் குவித்தார். எதிர்ப்புறம் நிதானமாக விளையாடி வந்த அக்சர் பட்டேல் 23 (21) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த சிவம் துபே 11 (9) ரன்களில் அவுட்டானலும் மறுபுறம் ஹர்திக் பாண்டியா டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடினார்.

தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய அவர் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் அரை சதமடித்து 59* (28) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் காயத்திலிருந்து குணமடைந்த அவர் மீண்டும் தனது தரத்தைக் காண்பித்து இந்திய அணிக்காக மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். இறுதியில் அவருடன் ஜிதேஷ் சர்மா 10* (5) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 175/6 ரன்களை எடுத்தது.

- Advertisement -

திலக் வர்மா சாதனை:

தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக லுங்கி நிகிடி 3, லுதோ சிப்பம்லா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதைத்தொடர்ந்து தென்னாபிரிக்க 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடுகிறது. அதைக் கட்டுப்படுத்தி வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா பந்து வீசுகிறது.

இதையும் படிங்க: இன்னும் 4 ரன் அடிச்சா போதும்.. டி20 போட்டிகளில் அசத்தல் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் – திலக் வர்மா

முன்னதாக இப்போட்டியில் அடித்த 26 ரன்களையும் சேர்த்து திலக் வர்மா 23 வயதில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக இந்தியாவுக்காக மிகவும் இளம் வயதில் டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் அடித்த வீரர் என்ற அபிஷேக் ஷர்மா சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் அபிஷேக் சர்மா 25 வருடம் 65 நாட்களில் 1000 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -