இன்னும் 4 ரன் அடிச்சா போதும்.. டி20 போட்டிகளில் அசத்தல் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் – திலக் வர்மா

Tilak Varma
- Advertisement -

இந்திய அணியின் இளம் நட்சத்திர இடதுகை ஆட்டக்காரரான திலக் வர்மா கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தனக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளில் அற்புதமாக விளையாடி வரும் அவர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராகவும் பார்க்கப்படுகிறார்.

டி20 போட்டிகளில் திலக் வர்மா நிகழ்த்த இருக்கும் சாதனை :

குறிப்பாக அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற முக்கிய முக்கியமான காரணமாக திகழ்ந்து ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார். அவரது அந்த சிறப்பான மேட்ச் வின்னிங் நாக் பலரது மத்தயிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.

- Advertisement -

டி20 போட்டிகளை பொறுத்தவரை டாப் ஆர்டரில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் திலக் வர்மா அடுத்த 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் நிச்சயம் இடம் பிடிப்பார் என்பது உறுதி. மேலும் அவர் இடதுகை ஆட்டக்காரராக டாப் ஆர்டரில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தையும் அளித்துள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் விளையாடும் திலக் வருமா இந்த போட்டியில் 4 ரன்கள் அடித்தால் சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் திலக் வர்மா நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 36 டி20 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 4 அரைசதம் என 47.4 ரன்கள் சராசரியுடன் 996 ரன்களை குவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்த டி20 தொடரில் சிறப்பாக விளையாடி சுப்மன் கில் அந்த இடத்தை உறுதிசெய்ய வேண்டும் – இர்பான் பதான் கருத்து

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் மேலும் அவர் 4 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரர்களின் பட்டியலில் இடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement