IND vs RSA : ரோஹித் இல்லாம இது நடக்காத? – 2022இல் தென்ஆப்பிரிக்காவிடம் மண்டியிட்டு வரும் இந்தியாவின் அவலம்

Rohith
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9-ஆம் தேதியான நேற்று துவங்கியது. தலைநகரான டெல்லியில் இரவு 7 மணிக்கு நடைபெற்ற அந்த பரபரப்பான போட்டியில் 7 வித்தியாசத்தில் இந்தியாவை சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்த தென் ஆப்பிரிக்கா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 211/4 ரன்கள் சேர்த்தது.

IND vs SA

- Advertisement -

இந்தியாவுக்கு பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்த ருதுராஜ் – இஷான் கிசான் ஜோடி 57 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தது. அதில் ருதுராஜ் 23 (15) ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் வெளுத்து வாங்கிய இஷான் கிசான் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (48) ரன்களை விளாசி அவுட்டானார். அந்த தொடக்கத்தை பயன்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 36 (27) ரன்களும் கேப்டன் ரிஷப் பண்ட் 29 (16) ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

இந்தியா மோசம்:
கடைசியில் ஐபிஎல் 2022 கோப்பையை வென்று அணிக்குள் திரும்பிய ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 31* (12) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 212 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பவுமா 10 (8) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ட்வயன் பிரிடோரியஸ் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 29 (13) ரன்களை வெளுத்து வாங்கி அவுட்டானார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 22 (18) ரன்களில் அவுட்டானதால் தெனாப்பிரிக்கா 81/3 என போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியது.

David Miller SA

அப்போது ஜோடி சேர்ந்த ராசி வேன் டெர் டுஷன் – டேவிட் மில்லர் ஆகியோர் ஆரம்பத்தில் நிதானத்தை காட்டினாலும் அதன்பின் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் போன்ற தரமான பவுலர்களையும் சரமாரியாக அடித்தனர். அதில் 29 (30) ரன்கள் எடுத்திருந்த போது ஷ்ரேயஸ் ஐயர் தவறவிட்ட கேட்ச்சை பயன்படுத்திய டுஷன் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 75* (46) ரன்களையும் அவரைப்போல் தடுமாறாமல் மிரட்டலாக பேட்டிங் செய்த மில்லர் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 648 (31) ரன்களும் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவரிலேயே 212/3 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா அதிரடி வெற்றி பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் சேர்த்த ரன்களை பந்துவீச்சில் வாரி வழங்கிய இந்தியா முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவி தலைகுனிவுடன் பின்னடைவை சந்தித்துள்ளது.

- Advertisement -

ரோஹித் இல்லாமல்:
கேப்டன் ரோகித் சர்மா இல்லாத தருணத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய இந்திய அணியினர் பந்துவீச்சில் சொதப்பினர். இத்தனைக்கும் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், சஹால் என முன்னணி தரமான பவுலர்கள் இருந்த போதிலும் அவர்களை கேப்டன் ரிஷப் பண்ட் பயன்படுத்திய விதம் தவறாக இருந்தது. குறிப்பாக ஊதா தொப்பியை வென்ற சஹாலுக்கு 4 ஓவர்களை பண்ட் முழுமையாக வழங்காததில் இருந்தே அவரின் சுமாரான கேப்டன்ஷிப் தெரிந்தது. இதனால் நேற்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவை இந்திய ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்தார்கள் என்றே கூறலாம்.

indvswi

ஏனெனில் கடந்த நவம்பரில் இந்தியாவின் முழுநேர கேப்டன் பொறுப்பேற்றதற்கு பின் நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த 3 டி20 தொடரில் ஏறக்குறைய இதே இந்திய அணியை வைத்து தோல்வியே சந்திக்காமல் 3 வைட்வாஷ் கோப்பையுடன் 9 வெற்றிகளை பதிவு செய்தார். அந்த அணிகளை விட தென்ஆப்பிரிக்கா சற்று வலுவானது என்றாலும் சொந்த மண்ணில் எந்த அணிகளை காட்டிலும் இந்தியாதான் வலுவான அணி என்று அனைவரும் அறிவோம். ஆனால் அந்தப் பெருமையை கூட நேற்று இந்திய அணியினர் காப்பாற்றவில்லை. அது கூட பரவாயில்லை 2022இல் இதுவரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு போட்டியில் கூட இந்தியா வெற்றி பெறவே இல்லை.

- Advertisement -

மண்டியிடம் அவலம்:
1. ஆம் 2021 டிசம்பரில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வென்று 1 – 0 என முன்னிலை வகித்த போதிலும் 2022 புத்தாண்டு பிறந்த பின் நடந்த 2-வது போட்டியில் விராட் கோலி காயமடைந்த நிலையில் கேஎல் ராகுல் தலைமையில் இந்தியா தோல்வியடைந்தது. அதன்பின் 3-வது போட்டியில் விராட் கோலி திரும்பியும் இந்தியா தோற்றது.

Rahul-1

2. அதன்பின் அதே தென்னாப்பிரிக்க மண்ணில் கேஎல் ராகுல் தலைமையில் இந்தியா களமிறங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 – 0 என்ற கணக்கில் படுமோசமான ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

3. அதனால் நேற்றைய போட்டியில் அதற்கு பழிவாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த இந்தியா 2022இல் இதுவரை தென் ஆப்பிரிக்காவை சந்தித்த 6 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பதிவு செய்யாமல் மண்டியிட்டு வரும் அவலத்தை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : IND vs RSA : காலம் காலமாக சொந்த மண்ணில் இந்தியாவுக்கு ஷாக் கொடுத்து வரும் தெ.ஆ – புள்ளிவிவரம் இதோ

4. இந்த 6 போட்டிகளிலுமே ரோகித் சர்மா காயம் மற்றும் ஓய்வு காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.

5. அத்துடன் 2022இல் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிய 11 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. ஆனால் இதர கேப்டன்கள் தலைமையில் களமிறங்கிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்தது.

Advertisement