IND vs RSA : காலம் காலமாக சொந்த மண்ணில் இந்தியாவுக்கு ஷாக் கொடுத்து வரும் தெ.ஆ – புள்ளிவிவரம் இதோ

IND vs SA
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. ஜூன் 9-ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் அட்டகாசமாக பேட்டிங் செய்து 211/4 ரன்கள் விளாசி அசத்தியது. முதலாவதாக ருதுராஜ் கைக்வாட் – இஷான் கிசான் ஓப்பனிங் ஜோடி பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

Ishan Kishan 79

- Advertisement -

அதில் ருத்ராஜ் 23 (15) ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் சுமாரான பார்ம் காரணமாக விமர்சனத்திற்கு உள்ளான இஷான் கிசான் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (48) ரன்களை வெளுத்து வாங்கி பார்முக்கு திரும்பினார். அதை மிடில் ஆர்டரில் பயன்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 36 (27) ரன்களும் கேப்டன் ரிஷப் பண்ட் 29 (16) ரன்களும் விளாசி தங்களின் வேலையை செய்தனர்.

மிரட்டிய தென்ஆப்பிரிக்கா:
இறுதியில் ஐபிஎல் 2022 கோப்பையை வென்று நீண்ட நாட்களுக்கு பின் திரும்பிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக 2 பவுண்டரி 3 சிக்சருடன் 31* (12) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். அதைத்தொடர்ந்து 212 என்ற பெரிய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பாவமா ஆரம்பத்திலேயே 10 (8) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினாலும் அடுத்து களமிறங்கிய பிரிடோரியஸ் 1 பவுண்டரி 4 சிக்சர்கள் பறக்கவிட்டு 29 (13) ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 22 (18) ரன்களில் அவுட்டானதால் 81/3 என அந்த அணி தடுமாறியது.

David Miller SA

அப்போது களமிறங்கிய ராசி வேன் டெர் டுஷன் – டேவிட் மில்லர் ஜோடி ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல மிரட்டலாகவும் பேட்டிங் செய்து ரன்களை குவித்தது. அதில் 29* (30) ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்த டுசன் கொடுத்த கேட்ச்சை ஸ்ரேயாஸ் அய்யர் கோட்டை விட்டதை பயன்படுத்திய அவர் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 75* (46) ரன்கள் எடுத்து தோல்வியை பரிசளித்தார். மறுபுறம் தடுமாறாமல் பேட்டிங் செய்த மில்லர் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்ததால் 19.1 ஓவரிலேயே 212/3 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது.

- Advertisement -

நாங்க இலங்கை இல்ல:
மறுபுறம் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்ட இந்தியா 211 ரன்களைக் குவித்த போதிலும் பந்துவீச்சிலும் முதல் 10 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார் உட்பட அனைத்து பவுலர்களும் படுமோசமாக பந்துவீசி ரன்களை வாரி வழங்கினார். அதைவிட பீல்டிங் மோசமாக இருந்ததால் இந்த படு தோல்வியை சந்தித்த இந்தியா சொந்த மண்ணில் தலைகுனிவை சந்தித்தது.

miller

இத்தனைக்கும் கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராகவும், பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும், மார்ச்சில் இலங்கைக்கு எதிராகவும் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட 3 டி20 தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்தியா 3 கோப்பைகளையும் பெற்று சொந்த மண்ணில் ராஜாவாக திகழ்கிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட சொந்த மண்ணில் வலுவான இந்தியாவை அசால்டாக நேற்றைய போட்டியில் தோற்கடித்த தென்ஆப்பிரிக்கா 9 தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தோல்வியை பரிசளித்தது. இதனால் நாங்கள் ஒன்றும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற சுமாரான டீம் அல்ல என்று நிரூபித்த தென்னாப்பிரிக்கா எஞ்சிய தொடரில் எங்களை குறைத்து மதிப்பிடாமல் முழு மூச்சுடன் சிறப்பாகச் செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும் என்று இந்தியாவிற்கு சாட்டையடி கொடுத்து காண்பித்துள்ளது.

INDvsRSA

சொந்த மண்ணில் ஷாக்:
பொதுவாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மாஸ் அணிகளுக்கு எதிராக கூட இந்தியா வெற்றிகரமான அணியாகவே இருந்து வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட இந்தியாவுக்கு காலம் காலமாக சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது என்றே கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் நேற்றைய போட்டி உட்பட இந்தியாவை அதன் சொந்த மண்ணில் இதுவரை 7 டி20 போட்டிகளில் சந்தித்துள்ள தென் ஆப்பிரிக்கா 5 வெற்றிகளை பெற்று மிரட்டியுள்ளது, 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. கடந்த 2019இல் முதலும் கடைசியுமாக மொஹாலியில் நடந்த டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க : IND vs RSA : இந்தியாவுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்த தெ.ஆ டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை

முதல் முறையாக கடந்த 2015இல் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்காவை சந்தித்த இந்தியா 2 – 0 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில் கடந்த 2019இல் 3 போடிகள் கொண்ட தொடரில் சந்தித்த போதும் 1 – 1 என்ற கணக்கில் ட்ரா மட்டுமே செய்ய முடிந்தது. அந்த அளவுக்கு சொந்த மண்ணில் ஓடவிடும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இம்முறையாவது இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement