IND vs RSA : இந்தியாவுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்த தெ.ஆ டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை

Advertisement

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தென்னாபிரிக்கா பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9-ஆம் தேதியான நேற்று துவங்கியது. தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் பொறுப்பாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 211/4 ரன்கள் குவித்து மிரட்டியது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கைக்வாட் – இஷான் கிசான் ஆகியோர் 57 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்டனர்.

Ishan Kishan 79

அதில் ருதுராஜ் கைக்வாட் 23 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறம் தென் ஆப்பிரிக்காவை வெளுத்து வாங்கிய இஷான் கிசான் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (48) ரன்களை குவித்து நல்ல பார்முக்கு திரும்பினார். அதை அப்படியே வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் மிரட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது பங்கிற்கு 36 (27) ரன்களும் கேப்டனாக பொறுப்பேற்ற ரிஷப் பண்ட் அதிரடியாக 29 (16) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஐபிஎல் கோப்பையை வென்று நீண்ட நாட்களுக்கு பின் திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 31* (12) ரன்கள் எடுத்து மாஸ் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

மண்ணைகவ்விய இந்தியா:
அதை தொடர்ந்து 212 என்ற பெரிய இலக்கால் இந்தியா எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை துரத்திய தென்னாப்பிரிக்காவின் கேப்டன் தெம்பா பவுமா 10 (8) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய பிரிடோரியஸ் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 29 (13) ரன்களை தெறிக்கவிட்டு ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 22 (18) ரன்களில் நடையை கட்டியதால் 81/3 என அந்த அணி தடுமாறியது. அப்போது களமிறங்கிய ராசி வேன் டெர் டுஷன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் ஆரம்பத்தில் நிதானத்தை காட்டினாலும் கடைசி 10 ஓவர்களில் மிரட்டலாக பேட்டிங் செய்தனர்.

miller

அதில் 29 ரன்கள் எடுத்திருந்த போது டுஷன் கொடுத்த கேட்ச்சை ஷ்ரேயஸ் ஐயர் நழுவ விட்டதை பயன்படுத்திய அவர் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 75* (46) ரன்கள் எடுக்க அவரைப்போல் தடுமாறாமல் இந்தியாவை அடித்து நொறுக்கிய டேவிட் மில்லர் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 64* (31) ரன்கள் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.1 ஓவரில் 212/3 ரன்களை எடுத்த தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றி பெற்று 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் எடுத்த ரன்களை பந்துவீச்சில் அதுவும் கடைசி 10 ஓவர்களில் வாரி வழங்கிய இந்தியா மோசமான தோல்வியை சந்தித்து சொந்த மண்ணில் அவமானத்திற்கு உள்ளானது.

- Advertisement -

வரலாற்று தோல்வி:
1. இந்த போட்டியில் வென்றதன் வாயிலாக தென் ஆப்பிரிக்கா ஒருசில வரலாற்று தோல்விகளை இந்தியாவிற்கு பரிசு அளித்துள்ளது. அதில் குறிப்பாக கடந்த 2021 டி20 உலக கோப்பையில் கடைசியில் பெற்ற 3 தொடர் வெற்றிகளில் தொடங்கி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பெற்ற 9 வெற்றிகளின் சேர்த்து கடைசியாக பங்கேற்ற 12 போட்டிகளில் இந்தியா தோல்வியடையாமல் தொடர்ச்சியாக வென்று வந்தது.

IND vs SA

2. அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை ஆப்கானிஸ்தான், ருமேனியா ஆகிய அணிகளுடன் பகிர்ந்து கொண்ட இந்தியாவை 12 தொடர் வெற்றிகளுக்கு பின் நேற்றைய போட்டியில் தோற்கடித்து அந்த உலக சாதனையை முழுமையாக தன்வசம் செய்யவிடாமல் தென் ஆப்பிரிக்கா தடுத்து நிறுத்தியது.

- Advertisement -

3. அதேபோல் சர்வதேச டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து 200க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்ததே கிடையாது. இதற்கு முன் 200க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த 11 போட்டிகளிலும் இந்தியா வெற்றியை பெற்றது. ஆனால் நேற்று தான் முதல் முறையாக 200க்கும் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.

toss

3. அதைவிட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா தனக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றிகரமாக சேசிங் செய்த அதிகபட்ச ரன்கள் இதோ:

இதையும் படிங்க : IND vs RSA : முக்கிய நேரத்தில் தினேஷ் கார்த்திக்கை அவமானபடுத்திய பாண்டியா, ரசிகர்கள் கோபம் – நடந்தது என்ன?


1. 212/3 – இந்தியாவுக்கு எதிராக, டெல்லி, 2022*
2. 208/3 – வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, ஜோகன்னஸ்பர்க், 2007
3. 200/3 – இந்தியாவுக்கு எதிராக, தரம்சாலா, 2015
4. 189/4 – இந்தியாவுக்கு எதிராக, செஞ்சூரியன், 2018
5. 174/2, நியூசிலாந்துக்கு எதிராக, ஹமில்டன், 2012

Advertisement