- Advertisement -
இந்திய கிரிக்கெட்

1983 – 2024 ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு கண்டமா? பயமுறுத்தும் வரலாற்று புள்ளிவிவரம்.. ரசிகர்கள் இரட்டை கவலை

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கியது. அதனுடடைய மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துபாயில் துவங்குகிறது. அதில் லீக் சுற்றைப் போல நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று இங்குள்ள ரசிகர்கள் நம்புகின்றனர்.

இருப்பினும் அந்தப் போட்டி நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்கு ராசியற்ற ஒன்றாக இருந்து வருகிறது. ஏனெனில் 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சனிக்கிழமை தோற்கடித்து இந்தியா வென்றது. 2002 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி திங்கள்கிழமை நடந்த நிலையில் மழையால் ரத்து செய்யப்பட்டு கோப்பை பகிர்ந்து கொள்ளப்பட்டது.

- Advertisement -

ராசியற்ற ஞாயிறு:

2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் திங்கள்கிழமை பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா கோப்பையை வென்றது. 2011 உலகக் கோப்பையை சனிக்கிழமையன்று சொந்த மண்ணில் இலங்கையை தோற்கடித்து இந்தியா வென்றதை மறக்க முடியாது. 2013 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை துவங்கிய போதிலும் மழை குறுக்கே வந்தது.

அதனால் இந்திய நேரப்படி திங்கள்கிழமை நாளன்று இங்கிலாந்தை சொந்த மண்ணில் தோற்கடித்து இந்தியா கோப்பையை வென்றது. சமீபத்திய 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சனிக்கிழமை அன்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா கோப்பையை முத்தமிட்டது. ஆனால் 2000 சாம்பியன்ஸ் ட்ராபியில் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

- Advertisement -

இம்முறை ஞாயிறு ராசியாகுமா:

அதில் இதே நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதை விட 2003 உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவில் மோசமாக இந்தியா தோல்வியை சந்தித்ததை இப்போதும் 90ஸ் கிட்ஸ் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இலங்கை அணியிடம் இந்தியா தோற்றது.

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும் ஞாயிற்றுக்கிழமை பரம எதிரி பாகிஸ்தானிடம் இந்தியா மோசமாக தோற்றது. இதிலிருந்து வரலாற்றில் நடைபெற்ற ஐசிசி ஃபைனல்களில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா ஒருமுறை கூட வென்றதில்லை. அதனால் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்கு ஐசிசி இறுதிப்போட்டிகளில் கண்டமாக இருப்பதாக ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: அக்சர் படேல் நல்லாத்தான் ஆடுறாரு.. ஆனாலும் கே.எல் ராகுலுக்கு அந்த வாய்ப்பை தாங்க – அணில் கும்ப்ளே ஆதரவு

இது போக 2000 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் என நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய ஐசிசி இறுதிப் போட்டிகளில் இந்தியா வென்றதே கிடையாது. இந்த 2 வரலாறும் இந்திய ரசிகர்களுக்கு கவலையைக் கொடுப்பதாக அமைகிறது. ஆனால் வருங்காலத்தை யாராலும் கணிக்க முடியாது என்பதால் இம்முறை இந்தியா இந்த 2 மோசமான வரலாற்றையும் மாற்றி புதிய சரித்திரம் படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -