அக்சர் படேல் நல்லாத்தான் ஆடுறாரு.. ஆனாலும் கே.எல் ராகுலுக்கு அந்த வாய்ப்பை தாங்க – அணில் கும்ப்ளே ஆதரவு

Kumble
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது துபாய் மண்ணில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி அரையிறுதி போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு தாங்க : அணில் கும்ப்ளே

இந்த தொடரில் இந்திய அணியின் வீரர்கள் அனைவருமே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்திய அணி நிச்சயம் இந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி சாதனை நிகழ்த்தும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஏற்பட்ட மிக மாற்றமாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் ஐந்தாவது வரிசையில் இருந்து ஆறாவது வரிசைக்கு பின்னுக்கு தள்ளப்பட்டார்.

- Advertisement -

அவருக்கு பதிலாக ஐந்தாவது இடத்தில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் படேல் களமிறங்கி விளையாடி வருகிறார். இதுவரை நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளிலுமே அக்சர் பட்டேல் மிக சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளதால் இறுதிப் போட்டியிலும் அவரே ஐந்தாவது இடத்தில் விளையாடுவார் என்று தெரிகிறது.

ஆனால் கே.எல் ராகுல் ஐந்தாவது இடத்தில் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அணில் கும்ப்ளே கூறுகையில் : இந்திய அணி தற்போது ஐந்தாவது இடத்தில் அக்சர் பட்டேலை களமிறக்கி வருகிறது. அவரும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடுகிறார். ஆனாலும் என்னை பொறுத்தவரை அக்சர் படேலுக்கு முன்னதாக கே.எல் ராகுல் களமிறங்க வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் கே.எல் ராகுல் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க கூடிய ஒரு சிறப்பான பேட்ஸ்மேன். அவர் கொஞ்சம் முன்கூட்டியே வந்தால் எதிரில் உள்ள வீரர்களுடன் பெரிய பாட்னர்ஷிப் அமைக்க முடியும். அதேபோன்று அவர் 30 ரன்களை கடந்து விட்டால் நிச்சயம் மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி செல்வார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசியில் போட்டியில் கூட அவரிடம் உள்ள திறமையை அவர் மிகச் சிறப்பாக வெளிக்காட்டி அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : பைனல் மேட்ச்ல இதுமட்டும் நடந்தா ரோஹித்தோட கரியர் டோட்டலா ஓவர் – வெளியான லேட்டஸ்ட் தகவல்

என்னை பொறுத்தவரை கே.எல் ராகுல் போன்ற ஒரு அற்புதமான வீரரை பின்னுக்கு தள்ளி அவருடைய திறனை வீணடிப்பதை விட சற்று முன்கூட்டியே களமிறக்கினால் அவர் அணியின் பெரிய ரன் குவிப்பிற்கு நிச்சயம் உதவுவார் என அணில் கும்ப்ளே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement