இந்திய அணி அபார பந்துவீச்சு. துவக்க வீரர்கள் இறங்குவதில் சிக்கல். என்ன செய்யப்போகிறது ? – இந்திய அணி

Ind-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

Ind vs Aus

- Advertisement -

இந்தத் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மதியம் ஒன்று 1.30 மணிக்கு துவங்கியது. இரு அணிகளுக்கும் சம பலம் வாய்ந்த அணி என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்களும் மற்றும் மார்னஸ் லாபுஷேன் 54 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமி சிறப்பாக பந்துவீசி 63 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து தற்போது 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்க தயாராகி வருகிறது.

Smith

பெங்களூரு மைதானம் பவுண்டரி அளவுகளில் சிறிய மைதானம் என்பதாலும் மேலும் பேட்டிங்க்கு கைகொடுக்கும் மைதானம் என்பதாலும் இந்திய அணி எளிதாக இந்த இலக்கை சேசிங் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போது காயமடைந்த தவான் பேட்டிங் இறங்குவாரா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி தவான் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக ரோஹித்துடன் ராகுல் களமிறங்கி துவக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement