IND vs IRE : ருதுராஜ் நிதானம், டெத் ஓவரில் அடித்து நொறுக்கிய ரிங்கு சிங், சிவம் துபே – கடைசி 2 ஓவரில் நடந்த மேஜிக்

- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் காயத்திலிருந்து குணமடைந்த ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக இளம் வீரர்களை கொண்ட அணியை தலைமை தாங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் மழையின் உதவியுடன் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டப்லின் நகரில் துவங்கியது.

IND-vs-IRE-1

- Advertisement -

அதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட ஜெய்ஸ்வால் 18 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக வந்த இளம் வீரர் திலக் வர்மா 1 (2) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நிதானமாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜுடன் அடுத்ததாக களமிறங்கி ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார்.

அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தடுமாறிய இந்தியாவை தூக்கி நிறுத்திய அவர் 5 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டதால் 50 ரன்களில் தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 (26) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அவரைத் தொடர்ந்து வந்த ரிங்கு சிங் தன்னுடைய முதல் போட்டியில் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 58 (43) ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

Ruturaj-and-Samson

அந்த சமயத்தில் வந்த சிவம் துபே நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய போதிலும் தடுமாற்றமாக செயல்பட்டார். ஆனாலும் மறுபுறம் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் பேரி மெக்கார்த்தி வீசிய 19வது ஓவரில் 2, 3 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை அடித்து வேட்டையை துவங்கினார். அதனால் தடுமாறிய பவுலர் அடுத்த 2 பந்துகளில் ஓய்ட் வீசிய நிலையில் அதற்கடுத்த பந்தில் மீண்டும் சிக்ஸர் அடித்த ரிங்கு சிங் இந்தியா 150 ரன்களை தாண்டுவதற்கு உதவினார்.

- Advertisement -

இறுதியில் மறுபுறம் தடுமாறிய சிவம் துபேவும் மார்க் அடைர் வீசிய கடைசி ஓவரின் முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்கள் அடித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து 4வது பந்தில் சிக்சர் அடித்த ரிங்கு சிங் அதற்கடுத்த பந்தில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 38 (21) ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் சிவம் துபே 2 சிக்சருடன் 22* (16) ரன்கள் எடுத்ததால் தப்பிய இந்தியா 20 ஓவர்களில் 185/5 ரன்கள் எடுத்தது.

Rinku-Singh-1

குறிப்பாக 15.1 ஓவரில் 129/4 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிய இந்தியாவை கடைசி 2 ஓவரில் ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே ஆகியோர் இணைந்து 42 ரன்கள் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி மேஜிக் செய்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க:IND vs IRE : இரண்டாவது டி20 போட்டிக்கான அணியில் தைரியமான முடிவை கையிலெடுத்த கேப்டன் பும்ரா – விவரம் இதோ

மறுபுறம் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசி கடைசி நேரங்களில் சுமாராக செயல்பட்டு ரன்களை வாரி வழங்கிய அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பேரி மெக்கார்த்தி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதைத் தொடர்ந்து 186 என்ற இலக்கை இந்த போட்டியில் அயர்லாந்து துரத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement