IND vs IRE : இரண்டாவது டி20 போட்டிக்கான அணியில் தைரியமான முடிவை கையிலெடுத்த கேப்டன் பும்ரா – விவரம் இதோ

IND-vs-IRE-1
- Advertisement -

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது சற்று முன்னர் டப்ளின் நகரில் துவங்கியது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது தற்போதைய நிலையில் இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND-vs-IRE

- Advertisement -

அதனை தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் இந்த இரண்டாவது போட்டியில் டாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் டாசுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் பும்ரா எடுத்துள்ள ஒரு தைரியமான முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதன்படி இன்றைய இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

Bumrah

இவ்வேளையில் முதலாவது டி20 போட்டியில் விளையாடிய அதே அணியை மீண்டும் தைரியமாக முடிவு செய்து அந்த அணியே விளையாடும் என்று பும்ரா அறிவித்தார். நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி தற்போது இந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.

- Advertisement -

அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் அயர்லாந்து அணி விளையாடி வருகிறது. இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2023 : சாம்சனுக்கு இடமில்லை, நேரில் வெளியிடும் அஜித் அகர்கர் – இந்தியாவின் 17 பேர் உத்தேச அணி இதோ

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) திலக் வர்மா, 4) சஞ்சு சாம்சன், 5) ரிங்கு சிங், 6) ஷிவம் துபே, 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) பிரசித் கிருஷ்ணா, 9) அர்ஷ்தீப் சிங், 10) பும்ரா, 11) ரவி பிஷ்னாய்.

Advertisement