- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் இலங்கை டி20 போட்டியில் நீக்கப்பட்ட தமிழக வீரர்.. சொதப்பல் வீரருக்கு இடம்.. இந்தியாவின் பிளேயிங் லெவன்

இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்று ஜிம்பாப்வே மண்ணிலும் வெற்றி கண்ட இந்தியா அடுத்ததாக இந்த தொடரில் விளையாடுகிறது. அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் களமிறங்கவில்லை.

அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்தியா விளையாடும் இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 27ஆம் தேதி துவங்கியது. தம்புலா நகரில் இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதே சமயம் தாங்களும் முதலிலேயே பேட்டிங் செய்ய விரும்புவதாக இந்திய கேப்டன் சூரியகுமார் தெரிவித்தார்.

- Advertisement -

இந்திய அணி:
அத்துடன் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய டி20 போட்டியில் இருந்து சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் இப்போட்டியில் விளையாடவில்லை என்றும் அவர் அறிவித்தார். மேலும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது ஆகியோரும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்று சூரியகுமார் தெரிவித்தார். அவர்களுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதை விட சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமாகி சொதப்பலாக செயல்பட்ட ரியான் பராக் இந்தப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவதாக சூரியகுமார் தெரிவித்தார். அதே போல துவக்க வீரர்களாக துணை கேப்டன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் விளையாட உள்ளனர். அத்துடன் விராட் கோலி விளையாடிய 3வது இடத்தில் ரிஷப் பண்ட் வாய்ப்பை பெற்றார். மேலும் முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பிடித்தனர்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச் முதலில் பேட்டிங் செய்வதற்கு நன்றாக தெரிகிறது. எது மாறினாலும் நாங்கள் விளையாடும் கிரிக்கெட்டின் பிராண்ட் அப்படியே தான் இருக்கும். கௌதம் கம்பீருடன் என்னுடைய உறவு பல வருடங்களாக ஸ்பெஷலாக இருக்கிறது. துபே, சாம்சன், கலீல், சுந்தர் ஆகியோர் விளையாடவில்லை. உலகக் கோப்பை வெற்றி வரலாறு. இனிமேல் நாங்கள் புதிய சவாலை துவங்க உள்ளோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பேட்டிங்கில் புத்திசாலியாக இருக்கலாம்.. ஆனா டி20 கேப்டனாக சூரியகுமார் இதை கத்துக்கனும்.. சாஸ்திரி அட்வைஸ்

இந்திய அணி: சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (கீப்பர்), சூரியகுமாரி யாதவ் (கேப்டன்), ரியான் பராக், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

- Advertisement -