- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஓப்பனிங்கில் கிங் கோலி.. ரோஹித் 2 அதிரடி முடிவு.. ஸ்பின்னர்களே இல்லாத இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. அப்போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இந்திய அணியில் தம்முடன் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்குவார் என்று அறிவித்தார்.

ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி அணிக்காக துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 741 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவர் இந்த தொடரில் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர், சௌரவ் கங்குலி போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். அதே முடிவை தற்போது கேப்டன் ரோகித் சர்மாவும் எடுத்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணி:
அதனால் ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. அதே போல விக்கெட் கீப்பராக பயிற்சிப் போட்டியில் அசத்திய ரிஷப் பண்ட் தேர்வானதால் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. அதை விட சகால் மற்றும் குல்தீப் யாதவ் இரண்டு ஸ்பின்னர்களையுமே ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கவில்லை. இத்தனைக்கும் குல்தீப் நல்ல ஃபார்மில் இருந்தும் ரோகித் அவரை தேர்ந்தெடுக்கவில்லை.

மாறாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய 2 சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களை இந்தியா தேர்வு செய்துள்ளது. இது பற்றி ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு. “நாங்கள் பந்து வீசுகிறோம். இந்த சூழ்நிலைகளுக்கு எங்களை நாங்கள் மேனேஜ் செய்துள்ளோம். அது கொஞ்சம் சவாலாக இருந்தாலும் நாங்கள் விளையாட வேண்டும்”

- Advertisement -

“நாங்கள் இதே போன்ற பிட்ச்சில் பயிற்சி போட்டியில் விளையாடினோம். இருப்பினும் இன்று என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது தெரியாது. இருப்பினும் பயிற்சி போட்டியில் நாங்கள் பயன்படுத்தியதை விட அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இதுவே விளையாட்டு. சூழ்நிலைகள் பற்றி தெரியாததால் எங்கள் முன்னே இலக்கு இருப்பதை விரும்புகிறோம். சஹால், குல்தீப், சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: அவதரித்த சேஸ் மாஸ்டர்.. ஆஸியை வீழ்த்தி இந்தியாவை அழைத்துச் சென்ற கிங் கோலி.. டி20 உ.கோ ரீவைண்ட்

இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (கீப்பர்), சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமத் சிராஜ்

- Advertisement -