இந்தியா டிக்ளேர். காய் நகர்த்திய கோலி. மீண்டும் அதே திட்டம் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 106 ரன்களுக்கு ஆட்டம் இழக்க இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது.

Kohli-1

- Advertisement -

அதன்படி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174 ரன்கள் எடுக்க இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மேலும் சிறப்பாக விளையாடி 347 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய அணி கேப்டன் விராட்கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்து 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரஹானே 51 ரன்களுக்கும், புஜாரா 55 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது வங்கதேச அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. வங்கதேச அணி இந்திய அணியை விட 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றே கூறலாம். ஏனெனில் முதல் போட்டியைப் போலவே இந்த போட்டியிலும் இந்திய அணி டிக்ளேர் செய்து இரண்டாவது நாளிலேயே கோலி பங்களாதேசை பேட்டிங் செய்ய பணித்தார்.

saha 2

அதன்படி இன்றைய போட்டியில் மீதமிருக்கும் ஓவர்களில் 8 விக்கெட் வரை வீழ்த்தினால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தும் என்பதை கணித்து கோலி டிக்ளேர் செய்தார். அதன்படி வங்கதேச அணி தற்போது வரை 14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களுடன் தத்தளித்து வருகிறது.

Ishanth-2

இதனால் மீண்டும் இன்னிங்ஸ் வெற்றியை கணித்து கோலி டிக்ளேர் செய்து இருப்பதாகவும் மேலும் இன்று முடிந்தவரை விக்கெட் வீழ்த்தி நாளை உணவு இடைவெளிக்குள் போட்டியை முடிக்கக் கோலி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement