- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வேலையை ஆரம்பித்த கம்பீர்.. சிஎஸ்கே வீரருக்கு இடம்.. ரோஹித் தலைமையில் இலங்கை ஒருநாள் தொடருக்கான அணி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற 20 ஓவர் தொடரையும் 4 – 1 (5) என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்டத் தொடர்களில் விளையாட உள்ளது.

அந்த தொடர்களுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக் குழு சூர்யகுமார் யாதவை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. அவருடைய தலைமையில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் போன்ற நிறைய இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

ஒருநாள் அணி:
அதே போல ஒருநாள் தொடர்கான இந்திய அணியும் தற்போது அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அந்தத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் அவர்கள் விளையாடுவதை விரும்புவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அதை உண்மையாக்கும் வகையில் ரோகித் சர்மா இலங்கை ஒருநாள் தொடரின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

ஏனெனில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்ல விரும்பும் கௌதம் கம்பீர் அதற்கு இப்போது முதலே ரோஹித் தலைமையில் அணியை கட்டமைக்க விரும்புகிறார். அதே போல 2023 உலகக் கோப்பையில் 530 ரன்கள் அடித்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சிக்கோப்பையில் விளையாடாததால் இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனால் 2024 ஐபிஎல் தொடரை கேப்டனாக வென்ற அவரை கொல்கத்தா அணியில் ஆலோசகராக இருந்த கம்பீர் தற்போது பயிற்சியாளராக இந்திய அணிக்குள் மீண்டும் கொண்டு வந்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் ஹர்திக் பாண்டியா இடம் பெறாத அந்த அணியில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கேஎல் ராகுல் சாதாரண வீரராக தேர்வாகியுள்ள நிலையில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வாகியுள்ளார். அத்துடன் சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்காகவும் ஓரளவு அசத்தி வரும் சிவம் துவே முதல் முறையாக ஒருநாள் அணியில் தேர்வாகியுள்ளார்.

இதையும் படிங்க: 500 டாலர்.. தனது ஆட்டநாயகன் விருதை ஜிம்பாப்வே மைதான பராமரிப்பாளர்களுக்கு கொடுத்தது ஏன்? துபே விளக்கம்

அத்துடன் ரியான் பராக், ஹர்ஷித் ராணா முதல் முறையாக ஒருநாள் அணியில் தேர்வாகியுள்ளனர். இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில் (துணை கேப்டன்), ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரியான் பராக், அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மத், முகமத் சிராஜ், ஹர்ஷித் ராணா

- Advertisement -