- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4க்கு 4.. இங்கிலாந்தை திணறடித்து.. 1948 முதல் சந்தித்த 17 தொடர் தோல்விகளை நிறுத்தி வரலாறு படைத்த இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடியது. அத்தொடரின் கடைசிப் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அதனால் இந்தியா கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என்று அனைவரும் நம்பினார்கள். ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்தியா 28 ரன்கள் மட்டும் கொடுத்து எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் எடுத்து இங்கிலாந்தை தோற்கடித்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 10 ரன்னுக்குள் வெற்றி பெற்று இந்தியா சாதனை படைத்தது.

- Advertisement -

4க்கு 4 திணறும் இங்கிலாந்து:

அதனால் 2 – 2 (5) என்ற கணக்கில் ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை இங்கிலாந்து அணியுடன் இளம் இந்தியா பகிர்ந்து கொண்டது. கடைசியாக இங்கிலாந்து 2018ஆம் ஆண்டு 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பின் 2020/2021இல் நடைபெற்ற தொடரை 3 – 1 (4) என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை இந்தியா தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்தது.

2021 – 2022இல் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரை இப்போது போலவே 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. தற்போது இத்தொடரையும் சேர்த்து கடைசியாக நடைபெற்ற 4 தொடர்ச்சியான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியை தோற்கடிக்க முடியாமல் இங்கிலாந்து திணறுகிறது. இது போக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு 5 மற்றும் 6 போட்டிகள் கொண்ட வெளிநாட்டு டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் இந்தியா வென்றுள்ளது.

- Advertisement -

தனித்துவ வெற்றி:

அதாவது 1948 முதல் 2025க்கு முன்பு வரை வெளிநாட்டு மண்ணில் இந்தியா மொத்தம் 17 முறை 5 மற்றும் 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. அந்த 17 தொடர்களில் ஒருமுறை கூட இந்தியா தொடரின் கடைசிப் போட்டியில் வென்றதில்லை. அந்த 17 தொடர்களில் நடைபெற்ற கடைசி போட்டிகளில் இந்தியா 10 தோல்விகளை சந்தித்தது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தன.

இதையும் படிங்க: 17 விக்கெட்ஸ்.. கிண்டலடிக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா.. சிராஜுடன் சேர்ந்து வெளிநாட்டு டெஸ்டில் தனித்துவ சாதனை

அந்த தனித்துவமான தொடர் வரலாற்றுத் தோல்விகளை தற்போது ஓவல் மைதானத்தில் இந்தியா முறியடித்துள்ளது. மொத்தத்தில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் வரலாற்று வெற்றியைப் பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. குறிப்பாக விராட், ரோஹித் இல்லாமல் இளம் இந்திய அணி இந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -