17 விக்கெட்ஸ்.. கிண்டலடிக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா.. சிராஜுடன் சேர்ந்து வெளிநாட்டு டெஸ்டில் தனித்துவ சாதனை

Mohammed Siraj
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை 2 – 2 என்ற கணக்கில் இந்திய அணி பகிர்ந்து கொண்டுள்ளது. குறிப்பாக ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி நாளில் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதன் காரணமாக இந்தியா தோல்வியை சந்திக்கும் என்பதே பலருடைய கணிப்பாக இருந்தது.

ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்திய அணி மேற்கொண்டு 28 ரன்கள் மட்டும் கொடுத்து இங்கிலாந்தின் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் எடுத்தது. அதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிராக்கள் வெற்றியை பெற்றது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 10க்கும் குறைவான ரன்னுக்குள் வெற்றி பெற்று இந்தியா சாதனை படைத்தது.

- Advertisement -

கிண்டல் ஹீரோ கிருஷ்ணா:

அந்த வெற்றிக்கு முஹமது சிராஜ் மொத்தமாக 9 விக்கெட்டுகளை (4+5) எடுத்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே போல பிரசித் கிருஷ்ணா 8 விக்கெட்டுகளை (4+4) எடுத்து இந்தியாவின் வெற்றியில் சைலன்ட் ஹீரோவாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். இத்தொடரின் முதல் போட்டியில் விளையாடிய அவரை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி இந்தியாவை தோற்கடித்தார்கள்.

அதனால் அடுத்தப் போட்டியில் நீக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா 4வது போட்டியிலும் தடுமாற்றமாகவே பவுலிங் செய்தார். அதனால் நிறைய பிரசித் கிருஷ்ணாவை இந்திய ரசிகர்களே கிண்டலடித்தார்கள் என்று சொல்லலாம். இருப்பினும் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத கிருஷ்ணா ஓவல் போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகள் (4+4) எடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

1969க்குப்பின் தனித்துவ சாதனை:

இதன் வாயிலாக ஒரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலிங் ஜோடி என்ற சாதனையை முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா படைத்துள்ளார்கள். இதற்கு முன் 1969 டெல்லி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிசன் சிங் பேடி (4+5) மற்றும் எரப்பள்ளி பிரசன்னா (4+5) ஆகியோர் அந்த சாதனையை படைத்தனர்.

இதையும் படிங்க: முதல் 2 வாரங்கள்.. அவங்க 3 பேரும் இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்தது – மனம்திறந்த கே.எல் ராகுல்

ஆனால் சொந்த மண்ணில் இந்தியாவுக்காக அந்த சாதனை படைத்தனர். சிராஜ் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்காக இந்த தனித்துவமான சாதனையை படித்துள்ளார்கள். மொத்தத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாத சூழ்நிலையை அற்புதமாக சமாளித்து வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்த சிராஜ் – கிருஷ்ணா ஜோடி பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement