- Advertisement -
டி20

மாஸ்டர்ஸ் லீக்: 74 ரன்ஸ்.. ராயுடு அசத்தலில் லாரா அணியை வீழ்த்திய இந்தியா சாம்பியன்.. சச்சின் சாதனை

இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் பிரைன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் மோதின. ராய்ப்பூரில் இரவு 7.30அணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அடுத்ததாக களம் இறங்கிய அந்த அணிக்கு ஜாம்பவான் பிரைன் லாரா ஆரம்பத்திலேயே 6 (6) ரன்னில் வினய் குமார் வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த பெர்கின்ஸ் 6 ரன்னில் அவுட்டானார். அவரது விக்கெட்டை எடுத்த சபாஷ் நதீம் மறுபுறம் அதிரடி காட்டிய ட்வயன் ஸ்மித்தை 45 (35) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

நல்ல பவுலிங்:

மிடில் ஆர்டரில் லெண்டில் சிம்மன்ஸ் அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக அரை சதமடித்து 57 (41) ரன்கள் குவித்தார். ஆனால் அடுத்து வந்த ரவி ராம்பால் 2, வால்டன் 6, தினேஷ் ராம்டின் 12* ரன்கள் மட்டுமே எடுத்தனர். இறுதியில் 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர் 148-7 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வினய் குமார் 3, சபாஷ் நதீம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக களமிறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தம்முடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 25 (18) ரன்னில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய அம்பாத்தி ராயுடு அதிரடியாக ரன்கள் குவித்தார். மறுபுறம் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த குர்கீரத் 14, யூசுப் பதான் 0 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ராயுடு அரை சதத்தை அடித்து 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 74 (50) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

ராயுடு அசத்தலில் இந்தியா சாம்பியன்:

இறுதியில் யுவராஜ் சிங் 13* (11), ஸ்டுவர்ட் பின்னி 2 சிக்ஸருடன் 16* (9) ரன்களை விளாசி ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 17.1 ஓவரில் 149-4 ரன்கள் எடுத்த இந்தியா மாஸ்டர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் காரணமாக 2025 மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை சச்சின் தலைமையில் வென்று வித்தியாச சாதனை படைத்தது.

இதையும் படிங்க: தோனி கையால் 100வது டெஸ்டில் ரிட்டையராக கூப்பிட்டேன்.. ஆனா இந்த பரிசை கொடுத்த தோனிக்கு நன்றி.. அஸ்வின்

ஏற்கனவே 2021, 2022ஆம் ஆண்டு ரோட் சேஃப்டி உலக சீரிஸ் தொடரையும் சச்சின் தலைமையில் இந்தியா வென்றது. தற்போது இதையும் சேர்த்து ஓய்வு பெற்ற பின் கேப்டனாக சச்சின் 3 கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளார். மறுபுறம் ஆஸ்லே நர்ஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -