தோனி கையால் 100வது டெஸ்டில் ரிட்டையராக கூப்பிட்டேன்.. ஆனா இந்த பரிசை கொடுத்த தோனிக்கு நன்றி.. அஸ்வின்

R Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் கடந்த டிசம்பர் மாதத்துடன் அதிரடியாக ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 2வது அதிக விக்கெட்டுகளை இந்தியாவுக்காக எடுத்து சாதனைப் படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு வெளிநாடுகளில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

முன்னதாக கடந்த வருடம் மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியது. அதில் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் அஸ்வின் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியை விளையாடி சாதனை படைத்தார். இந்நிலையில் அந்தப் போட்டியில் தனது 100வது ஸ்பெஷல் தொப்பியை வழங்க தோனியை அழைத்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

தோனி கையால் ஓய்வு முடிவு:

அந்தப் போட்டியுடன் ஓய்வு பெறலாம் என்று முடிவு எடுத்ததாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். இருப்பினும் அப்போது தோனி வராததால் அந்த முடிவை தள்ளிப் போட்டதாக அஸ்வின் கூறியுள்ளார். கடைசியில் தன்னுடைய சொந்த ஊரான சென்னைக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை தோனி தமக்கு பரிசாக வழங்கியுள்ளதாக அஸ்வின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அஸ்வின் நெகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு. “என்னுடைய நூறாவது டெஸ்ட் போட்டியில் தரம்சாலாவில் ஸ்பெஷல் தொப்பியை வழங்க எம்.எஸ். தோனிக்கு நான் அழைப்பு விடுத்தேன். அதையே என்னுடைய கடைசிப் போட்டியாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். இருப்பினும் தோனியால் அங்கே வர முடியவில்லை. ஆனால் அதற்கு பதிலாக மீண்டும் அவர் சிஎஸ்கே அணியில் என்னை எடுத்து பரிசை கொடுப்பார் என்று நினைக்கவே இல்லை”

- Advertisement -

அஸ்வின் நெகிழ்ச்சி:

“இது அதை விட சிறந்த பரிசு. அதற்காக நன்றி எம்எஸ். சிஎஸ்கே அணியில் நான் இருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். நான் நிறைய சாதித்தவனாக சிஎஸ்கே அணியில் இல்லை. ஒரு வட்டத்தை முழுமை செய்பவனாக மீண்டும் சிஎஸ்கே அணியில் இருக்க விரும்புகிறேன். இங்கே எனது கேரியரை துவங்கிய காலத்தில் விளையாடியதைப் போல் மீண்டும் மகிழ்ச்சியுடன் விளையாட உள்ளேன்”

இதையும் படிங்க: அதை செய்யாம அம்பயர்களிடம் போய் சண்டை போட்டது தப்பு தான்.. 2019 நோ-பால் குறித்து தோனி வருத்தம்

“இது இருப்பதற்கு அற்புதமான இடம்” என்று கூறினார். முன்னதாக 2010, 2011 ஐபிஎல் கோப்பைகளை தோனி தலைமையில் சென்னை வெல்வதற்கு அஸ்வின் முக்கிய பங்காற்றினர். அப்போது அவரது திறமையை அறிந்த தோனி இந்திய அணியிலும் வாய்ப்பைக் கொடுத்தார். அதைப் பயன்படுத்திய அஸ்வின் இன்று 2வது அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவுக்கும் தோனிக்கும் பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement