11 பந்தில் 0 ரன்னுக்கு 6 விக்கெட்.. போராடிய கிங் கோலி.. சொதப்பிய இந்தியா.. 2014க்குப்பின் பரிதாப சாதனை

INDIA 6 Wickets
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கியது. அதில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்ட தென்னாபிரிக்கா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆனால் இந்தியாவின் அற்புதமான வேகப்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாத அந்த அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனை படைத்த தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக கெய்ல் வேரின் 15 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

0 ரன்னுக்கு 6 விக்கெட்:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் 2வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு தாக்குப் பிடித்த கேப்டன் ரோஹித் சர்மாவை 39 ரன்களில் அவுட்டாக்கிய நன்ரே பர்கார மறுபுறம் சவாலை கொடுத்த கில்லையும் 36 ரன்களில் காலி செய்தார்.

போதாகுறைக்கு அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் அவருடைய வேகத்தில் டக் அவுட்டானதால் 110/4 என இந்தியா தடுமாறியது. அந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமாக விளையாடிதால் இந்தியா 153/4 என்ற நல்ல நிலைமையில் மீண்டும் போராடத் துவங்கியது. ஆனால் அப்போது ராகுலை 8 ரன்களில் காலி செய்த லுங்கி நிகிடி அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜாவை டக் அவுட்டாகி அடுத்ததாக வந்த பும்ராவையும் டக் அவுட் செய்து ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் எடுத்து பெரிய திருப்பு முனையை உண்டாக்கினார்.

- Advertisement -

அடுத்த சில ஓவர்களிலேயே விராட் கோலியும் 46 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் டக் அவுட்டானார்கள். அதனால் 153/4 என்ற நல்ல நிலையில் இருந்த இந்தியா அடுத்த 11 பந்துகளில் 0 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 153 ரன்களுக்கு கண் மூடி திறப்பதற்குள் ஆல் அவுட்டாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது.

இதையும் படிங்க: வெளியான புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல். டாப் 10 ல் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர் – யார் தெரியுமா?

குறிப்பாக 2014இல் மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பின் 10 வருடங்கள் கழித்து இப்போட்டியின் இன்னிங்ஸில் 6 இந்திய பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகப்படுத்தமாக ரபாடா, லுங்கி நிகிடி, நன்ரே பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது.

Advertisement