வெளியான புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல். டாப் 10 ல் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர் – யார் தெரியுமா?

ICC
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களுக்கு இடையே வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிடப்பட்டு இருந்த வழியில் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு என பிரத்தியேகமான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசை பட்டியலின் விவரம் குறித்தான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக தற்போது இந்த சீசனில் நிறைய டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தெந்த வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்பது குறித்து தகவல்கள் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜனவரி 3-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் வேளையில் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இன்று வெளியான டெஸ்ட் தரவரிசை பட்டியலில் பேட்டிங்கில் டாப் 10-ல் ஒரே ஒரு இந்திய வீரராக விராட் கோலி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமடித்து அசத்திய விராட் கோலி தற்போது 761 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

அவரை தவிர்த்து வேறு எந்த இந்திய வீரரும் டாப் 10-ல் இடம்பெறவில்லை. அதேபோன்று இந்த தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியை சேர்ந்த முன்னணி நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் முதலிடத்திலும், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க : மிரட்டிய சிராஜ்.. 135 வருடம் கழித்து ஓடவிட்ட இந்தியா மாஸ் சாதனை.. தெ.ஆ மோசமான உலக சாதனை

அதே போன்று டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரை தவிர்த்து ஜடேஜா நான்காவது இடத்திலும், பும்ரா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர்களின் வரிசையில் இந்திய வீரர்களான ஜடேஜா மற்றும் அஸ்வின் முதல் இரண்டு இடங்களில் தொடர்கின்றனர். அதனை தவிர்த்து தென்னாப்பிரிக்க வீரரான மார்கோ யான்சன் ஐந்து இடங்கள் முன்னேறி முதல் முறையாக எட்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement