- Advertisement -
இந்திய கிரிக்கெட்

51 ரன்ஸ்.. தெ.ஆ பதிலடி வெற்றி.. அதிர்ஷ்டத்தை தவற விட்ட இந்தியா தோற்க 3 காரணம் இதோ

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா முன்னிலை பெற்றது. அடுத்ததாக இரண்டாவது போட்டியில் டிசம்பர் 11ஆம் தேதி புதிய சண்டிகரில் இருக்கும் முல்லான்பூரில் இரவு 7:00 மணிக்கு துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 213/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் குயிண்டன் டீ காக் 5 பௌண்டரி 7 சிக்ஸரை பறக்க விட்டு 90 (45) ரன்கள் குவித்தார். அவருடன் கேப்டன் ஐடன் மார்க்ரம் 29, ப்ரேவிஸ் 14, டேவிட் மில்லர் 20* (12), பெரீரா 30* (16) ரன்கள் அடித்து கை கொடுத்தார்கள்.

- Advertisement -

இந்தியா சொதப்பல்:

மறுபுறம் சுமாராக பந்து வீசிய இந்திய அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மட்டும் அசத்தலாக 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு லுங்கி நிகிடி வீசிய முதல் ஓவரிலேயே துணை கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த அபிஷேக் சர்மா 17 (8) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அவரை காலி செய்த மார்கோ யான்சென் அடுத்து வந்த கேப்டன் சூரியகுமாரையும் 5 ரன்னில் பெவிலியன் அனுப்பி வைத்தார். அதனால் நிதானமாக விளையாட முயற்சித்த அக்சர் பட்டேல் 21 (21) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். அதன் காரணமாக 67/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு திலக் வர்மா அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:

ஆனால் எதிர்ப்புறம் தடுமாறிய ஹர்திக் பாண்டியா 20 (23) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்து போராடிய ஜித்தேஷ் சர்மா போராடி 27 (17) ரன்னில் அவுட்டாக சிவம் துபேவும் 1 (2) ரன்னில் நடையைக் கட்டியதால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. இறுதியில் திலக் வர்மாவும் போராடி அரை சதமடித்து 62 (34) ரன்களில் அவுட்டானார். அதனால் 19.1 ஓவரில் இந்தியாவை 162 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா 51 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

இதையும் படிங்க: கோல்டன் டக் அவுட்டான சுப்மன் கில்.. இதுக்கு அவரே இருந்திருக்கலாம்.. சஞ்சு சாம்சனுக்கு – குவியும் ஆதரவு

அந்த அணிக்கு பார்ட்மேன் 4, லுங்கி நிகிடி, மார்கோ யான்சென், லூதோ சிப்மாலா தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். இப்போட்டி நடைபெற்ற முல்லான்பூரில் கடைசி 6 ஐபிஎல் போட்டிகளில் 4 முறை முதலில் விளையாடிய அணிகளே வென்றுள்ளன. அதை சரியாக கணிக்கத் தவறிய இந்தியா டாஸ் வென்று சேசிங்கை தேர்ந்தெடுத்து அதிர்ஷ்டத்தை தவற விட்டது. மேலும் பந்து வீச்சில் வருண் தவறி மற்றவர்கள் சொதப்பியதும் பேட்டிங்கில் கில், சூரியகுமார் சொதப்பியதும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -