IND vs WI : வாய்ப்பு கொடுத்தா இப்டியா பண்ணுவீங்க, விராட் – ரோஹித்தை தலைகுனிய வைத்த இளம் வீரர்கள், ரசிகர்கள் ஏமாற்றம்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கிய இந்தியா அடுத்ததாக 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியிலேயே வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற காரணத்தால் உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் வகையிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையிலும் ஜூலை 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் துவங்கிய 2வது போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுத்து தங்களது இடத்தை கொடுத்தனர்.

அதனால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்ட நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 16 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 90 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த சுப்மன் கில் தடுமாற்றமாகவே செயல்பட்டு 34 (49) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட இசான் கிசான் அரை சதமடித்து 6 பவுண்டரி 1 சிக்சருடன் 55 (55) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

திணறிய இந்தியா:
ஆனால் அடுத்ததாக வந்து அக்சர் பட்டேல் 1 (8) ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 7 (14) ரன்களில் நடையை கட்டினார். அதை விட அப்போது காப்பாற்றுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 9 (19) ரன்களில் ஆட்டமிழந்து ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களையும் தலை குனிய வைத்தார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா 10 (21) ரன்களில் அவுட்டாக மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் மீண்டும் 24 (25) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

அதனால் ஏற்பட்ட சரிவிலிருந்து மீள முடியாத அளவுக்கு அடுத்ததாக வந்த சர்துல் தாக்கூர் 16, உம்ரான் மாலிக் 7, முகேஷ் குமார் 6 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்த வெஸ்ட் இண்டீஸ் 40.5 ஓவரிலேயே இந்தியாவை வெறும் 181 ரன்களுக்கு சுருட்டியது. குறிப்பாக கடந்த போட்டியிலேயே 5 விக்கெட் எடுத்து போராடிய அந்த அணி இந்த போட்டியில் அதை விட சிறப்பாக பந்து வீசிய நிலையில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி மற்றும் ரோமாரியா செஃபார்ட் தலா 3 விக்கெட்டுகளும் அலசாரி ஜோசப் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

- Advertisement -

இதை பார்த்த இந்திய ரசிகர்களுக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இல்லையென்றால் இது தான் உலகக் கோப்பையில் இந்தியாவின் நிலைமையா என்று சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். சொல்லப்போனால் 90/0 என்ற நல்ல துவக்கத்தை பெற்றும் 181 ரன்களுக்கு சுருண்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதனால் 2023 உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவே இப்படி திண்டாடும் இளம் வீரர்கள் சவாலான அணிகளுக்கு எதிராக எப்படி அசத்துவார்கள் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க:IND vs WI : வாய்ப்பை பொன்னாக மாற்றிய இஷான் கிசான் – தோனியின் சாதனையை சமன் செய்து சச்சினை மிஞ்சி அசத்தல், இந்தியா திணறல்

- Advertisement -

அதிலும் உங்களுக்காக வாய்ப்பு கொடுத்தால் இப்படி செய்கிறீர்களே என்று ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தலைகுனியும் அளவுக்கு இளம் பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகள் இருந்தது என்று சொல்லலாம். இருப்பினும் இப்போட்டி நடைபெறும் மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் தரமான பவுலர்களைக் கொண்டுள்ள இந்தியா இதே ஸ்கோரை வைத்து வெற்றிக்கு போராடி வருகிறது.

இதையும் படிங்க:IND vs WI : வாய்ப்பு கொடுத்தா இப்டியா பண்ணுவீங்க, விராட் – ரோஹித்தை தலைகுனிய வைத்த இளம் வீரர்கள், ரசிகர்கள் ஏமாற்றம்

குறிப்பாக மழை பெய்து பிட்ச் சுழலுக்கு சாதகமாக மாறியுள்ளது தெளிவாக தெரிகிறது. அதனால் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி வெற்றியை பெற்றுக் கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement