இந்தியாவை தவிர ஆஸ்திரேலியாவுக்கு யாரும் சவாலாக இருக்கமுடியாது – கிளென் மெக்ராத் ஓப்பன்டாக் ஆனால் டி20 உ.கோ பற்றி கிடையாது

mcgrath
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையை வெல்வதற்கு உலகில் அனைத்து அணிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அதில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை ஆரோன் பின்ச் தலைமையில் வென்ற ஆஸ்திரேலியா இம்முறை நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்குகிறது. மறுபுறம் கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வெல்ல போராட உள்ளது. இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை காட்டிலும் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டியில் மோதும் என்று நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் எதிர்பார்க்கின்றனர்.

indvsaus

- Advertisement -

குறிப்பாக இவ்விரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதி ஆஸ்திரேலியா வெல்லும் என்று அந்நாட்டின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் வெளிப்படையாகவே கணித்துள்ளார். அந்த வகையில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுக்கும் அணியாக இந்தியா பார்க்கப்படுகிறது. ஆனால் டி20 உலகக் கோப்பையை விட அடுத்த வருடம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா விளையாடுவதற்கு இந்தியா கடும் சவாலை கொடுக்கும் என்று அந்நாட்டின் முன்னாள் ஜாம்பவான் வீரர் கிளென் மெக்ராத் கூறியுள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்பிக்கும் வகையில் கடந்த 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை முதல் தொடரின் லீக் சுற்றில் மிரட்டிய விராட் கோலி தலைமையிலான இந்தியாவை பைனலில் தோற்கடித்த நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. அதன் நிலைமையில் 2021 – 2023 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் சுற்றில் இதுவரை முடிந்த போட்டிகளின் முடிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முறையே 71.43%, 70.00% புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளது.

WTC

53.33% புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் இந்தியா வரும் அக்டோபரில் வங்கதேசத்தில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வரும் 2023 பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் வங்கதேசத்தை எளிதாக தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியா சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சவாலான இந்தியா:
ஏனெனில் கடைசியாக கடந்த 2012இல் இங்கிலாந்துக்கு எதிராக தோற்றதற்கு பின் கடந்த 10 வருடங்களில் எந்த அணியிடமும் தோற்காமல் சொந்த மண்ணில் கில்லியாக வெற்றிநடை போட்டு வரும் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 18 வருடங்களாக தோற்காமல் இருந்து வருகிறது. அத்துடன் 2019, 2021 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா பார்டர் – கவாஸ்கர் தொடரின் சாம்பியனாக இருந்து வருகிறது. எனவே 2023இல் நடைபெறப்போகும் தொடரிலும் கடும் சவாலை கொடுக்க காத்திருக்கும் இந்தியாவுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தை வைத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் என்று கிளன் மெக்ராத் கூறியுள்ளார்.

Mcgrath

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு வந்து சிறப்பாக செயல்பட்டு தொடரை வெல்வதே ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய தனி சவலாகும். 2004இல் அங்கு நாங்கள் தொடரை வென்றதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். எனவே அதற்கு நீங்கள் நல்ல திட்டங்களுடன் வர வேண்டும். குறிப்பாக சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் சிறப்பாக செயல்படும் வகையில் பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் உடனடியாக தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்”

“மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடியது நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் இங்குள்ள காலச் சூழ்நிலைகள் பற்றிய அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.தற்போதைய ஆஸ்திரேலிய அணி எப்படி இந்திய துணைக் கண்டத்து மைதானங்களில் விளையாட வேண்டும் என்பதை சமீபத்திய இலங்கை மற்றும் பாகிஸ்தான் தொடரில் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதை விட இந்தியாவில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாகும்”

INDvsAUS

“ஆஸ்திரேலியாவில் இருக்கும் பிட்ச்கள் வேகம் மற்றும் பவுன்ஸ்க்கு சாதகமாக இருக்கும். எனவே இங்குள்ள மைதானங்களில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் போன்ற சரியான லென்த்தில் கட்டுப்பாட்டுடன் உங்களை உட்படுத்திக் கொண்டு பந்து வீசுவது வெற்றி பெறுவதற்கான ரகசியமாகும்” என்று கூறினார். சமீபத்தில் பாகிஸ்தானில் 2 – 0 (3) என்ற கணக்கில் தொடரை வென்ற பட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா கத்துக்குட்டியான இலங்கையிடம் 1 – 1 (2) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இப்போதும் சுழலுக்கு எதிராக தடுமாறும் அணியாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement