
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது ஜூலை 31-ஆம் தேதி துவங்கி நேற்று நடைபெற்ற ஐந்தாம் நாள் ஆட்டத்துடன் நிறைவுக்கு வந்தது. இந்த போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது.
அந்த வகையில் நடைபெற்ற இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 224 ரன்கள் குவித்தது. அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 247 ரன்களை குவித்தது.
இதன் காரணமாக 23 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ்சை விளையாடி இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 396 ரன்கள் குவித்தது. பின்னர் 373 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 367 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக இறுதியில் இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான த்ரில் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த ஐந்தாவது போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது. அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இதுவரை ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதே கிடையாது. ஆனால் முதல் முறையாக தற்போது வெளிநாட்டு தொடர் ஒன்றில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று புதிய சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 4க்கு 4.. இங்கிலாந்தை திணறடித்து.. 1948 முதல் சந்தித்த 17 தொடர் தோல்விகளை நிறுத்தி வரலாறு படைத்த இந்தியா
இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் இந்திய அணி எவ்வாறு இந்த தொடரை சமாளிக்கப்போகிறது என்பது குறித்த கேள்வி இருந்தது. ஆனால் இந்த இங்கிலாந்து தொடரினை இந்திய அணி சமன் செய்து அசத்தலான செயலப்பாட்டை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.