1க்கும் 5க்கும் போட்டி.. அதுல ஆஸியை விட இந்திய அணியின் பேலன்ஸ் வேற லெவல்.. விஸ்வனாத் கருத்து

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கோப்பையை வெல்வதற்காக விளையாட உள்ளன. அதில் காலம் காலமாக ஐசிசி தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு 5 கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தியதை போல் மீண்டும் வெற்றி கண்டு 6வது கோப்பையை வெல்ல களமிறங்குகிறது.

மறுபுறம் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்வதற்காக வெறித்தனமாக செயல்பட்டு வரும் இந்தியா 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறது. அதனால் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 2003 உலகக்கோப்பை தோல்விக்கு இந்தியா பழி தீர்க்கும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

- Advertisement -

1க்கும் 5க்கும் போட்டி:
இந்நிலையில் இப்போடியில் 2 அணிகளுமே சமமாக இருந்தாலும் பந்து வீச்சு துறையில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா அதிக சமநிலையுடன் இருப்பதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்பா மட்டுமே அச்சுறுத்தலை கொடுக்கும் பவுலராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இந்தியாவில் சிராஜ், ஷமி, பும்ரா, ஜடேஜா, குல்தீப் ஆகிய 5 பவுலர்களும் சவாலை கொடுக்கக் கூடியவர்களாக இருப்பதாக கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் உங்களுக்கு விக்கெட்டுகளே கிடைக்கவில்லை என்றால் ஷமி முக்கிய நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுப்பார். முதல் பந்திலேயே அவர் எவ்வளவு விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பதை பாருங்கள். துரதிஷ்டவசமாக பாண்டியா காயமடைந்தார். ஆனால் அந்த வாய்ப்பை ஷமி கச்சிதமாக படித்துக் கொண்டார். ஷமி பந்துகளை தரையில் அடிக்கிறார். அது வழுக்கிக் கொண்டு அதிரடியான வேகத்தில் பேட்ஸ்மேன்ளுக்கு ஆச்சரியத்தை கொடுப்பதே அவருடைய பந்து வீச்சின் அழகாகும்”

- Advertisement -

“அதே போல மற்றவர்களில் பும்ரா நல்ல திறமை கொண்டவர். சிராஜ் நன்றாக செயல்பட்டு வருகிறார். எனவே நம்முடைய பவுலிங் அட்டாக் ஆஸ்திரேலியர்களை விட சிறப்பாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகிய ஸ்பின்னர்களும் சிறப்பாக பந்து வீசியுள்ளார்கள்”

இதையும் படிங்க: பைனல் மேட்ச் நடக்கப்போற அகமதாபாத் பிட்ச் யாருக்கு சாதகம்? ஜெயிக்கப்போறது யார்? – பிட்ச் பராமரிப்பாளர் கூறுவது என்ன?

“ஆனால் ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்பா மட்டுமே அசத்துகிறார். அவரும் இந்தியாவுக்கு எதிராக விக்கெட்டுகளை எடுக்க தடுமாறலாம். ரோஹித் சர்மா பவர் பிளே ஓவர்களில் சதத்தை பற்றி கவலைப்படாமல் அடுத்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதற்கான அடித்தளத்தை கொடுக்கிறார். விராட் கோலி ஆரம்பத்திலிருந்தே சிக்ஸர் அடிக்க முயற்சிக்க மாட்டார். ரோஹித் நல்ல அடித்தளத்தை கொடுக்கிறார். கில் தெளிவாக அடித்து மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடுவதற்கான துவக்கத்தை கொடுக்கிறார்” என்று கூறினார்.

Advertisement