தோனி ஓய்வுக்கு பிறகு..! இந்த 3 இளம் விக்கெட் கீப்பர்களுக்கு தான் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது..!

dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் பேட்டிங் திறமை வேண்டுமானால் அவ்வப்போது குறை கூறும்படி இருக்கலாம். ஆனால் கீப்பிங் என்று வந்துவிட்டால் அவரை மிஞ்ச ஆளே இல்லை என்று கூறலாம். தோனி இன்னும் சில ஆண்டுகளில் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவது உறுதி என்று பல கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். அதனால் அவரது இடத்தை பூர்த்தி செய்ய இப்போதிருந்தே ஒரு நல்ல கீப்பரை இனம் காணுதல் மிக முக்கியம் தான்.

rishab

- Advertisement -

தோனிக்கு பிறகு யார் இந்திய அணிக்கு சிறந்த கீப்பராக இருப்பார் என்று அனைவரும் ஆழ்ந்து யோசித்துவரும் நிலையில், சமீபத்தில் தேசிய தேர்வு கமிட்டி தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாத் கூறுகையில் “தோனி தற்போதும் ஒரு சிறந்த கீப்பராக தான் உள்ளார். ஆனால் , அவருக்கு பிறகு யார் கீப்பராக இருக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு நம்மிடம் இளம் விக்கெட் கீப்பர்கள் உருவாகி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய தேர்வுக் குழு ரஷிப் பண்ட் , சஞ்சு சாம்சன் போன்ற விக்கெட் கீப்பர்களை ஏற்கனவே இங்கிலாந்து முத்தரப்பு தொடரில் A அணியில் சேர்த்துள்ளது. மேலும் இளம் விக்கெட் கீப்பரான ஷிகர் பரத்தும் இங்கிலாந்தில் நடக்க உள்ள 4 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.

samson

சமீபத்தில் இதுபற்றி ஐபி டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள எம்.எஸ்.பிரசாத் “தோனி சிறப்பாக தான் விளையாடி வருகிறார். இருப்பினும் நாங்கள் நிதாஸ் தொடரில் தினேஷ் கார்த்திகை கீப்பராக பயன் படுத்தினோம்.

karthik

எங்களுக்கு மேலும் பல சிறந்த கீப்பர்கள் தேவை, அதனால் தான் 6 கீப்பர்களை நாங்கள் களமிறக்கியுள்ளோம். அவர்கள் சிறப்பாக விளையாடி வருங்கால இந்திய அணிக்கு பலமாக இருப்பார்கள் என்று நம்பிக்கை வைத்துள்ளோம் ” என்று கூறியிருந்தார்.

Advertisement