நிறைய எதிர்பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள். முடிவுக்கு வந்த பிங்க் பால் டெஸ்ட் – விவரம் இதோ

Ind

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி 22ஆம் தேதி கொல்கத்தாவில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே துவங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணி 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 347 ரன்களைக் குவித்தது கேப்டன் கோலி சதம் அடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி பிங்க் பாலில் நடைபெறுவதால் இந்த போட்டிக்கான சுவாரசியம் துவக்க நாளிலிருந்தே அதிகமாக இருந்தது. அதனால் முதல் நான்கு நான்காக டிக்கெட் முழுவதும் விற்பனை ஆகியிருந்த நிலையில் போட்டி மூன்று நாள்களில் முடிவடைந்ததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர் என்று கூறலாம்.

Umesh

ஏனெனில் அதிகப்படியாக ரன்கள் அடிக்கப்பட்டு போட்டி சுவாரசியமாக அமையும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி ஒரே இன்னிங்க்ஸை மட்டுமே விளையாடியது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்திய அணியின் பந்துவீச்சு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கும் என்று நம்பலாம். அந்த அளவிற்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர்.

- Advertisement -