ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 21ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஃபர்கான் 58 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிவம் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய இந்தியா 18.5 ஓவரிலேயே 174/4 ரன்களை எடுத்து இத்தொடரில் 2வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இந்தியாவை கலாய்த்த ரவூப்:
முன்னதாக அப்போட்டியில் ஹரிஷ் ரவூப், ஷாஹின் அப்ரிடி ஆகிய பாகிஸ்தான் பவுலர்கள் இந்தியாவின் அபிஷேக் சர்மா – சுப்மன் கில் ஆகியோரை ஸ்லெட்ஜிங் செய்தனர். அதற்கு அவர்கள் இருவருக்குமே சுப்மன் கில் – அபிஷேக் ஆகியோர் வாயாலும் பேட்டாலும் தக்க பதிலடி கொடுத்தனர். மறுபுறம் தங்களுடைய வீரர்களிடம் வம்பிழுப்பதை பார்த்த இந்திய ரசிகர்கள் பவுண்டரி எல்லைக்கு வந்த ஹரிஷ் ரவூப், அப்ரிடிக்கு எதிராக கூச்சலிட்டு பதிலடி கொடுத்தனர்.
அப்போது ஹரிஷ் ரவூப் 6 விரல்களைக் காட்டி “விமானம் விழுந்து நொறுங்கியது” போன்ற சைகையை செய்து இந்திய ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார். அதாவது சமீபத்தில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூரில் உண்மையாக வெற்றி பெற்றது இந்தியா என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் பாகிஸ்தான் அரசும் ஊடகங்களும் இந்தியாவை தாங்கள் வென்றதாக போலியாக பிரகனாடப்படுத்தின.
கிங் கோலி பொளந்தது மறந்துடுச்சா:
குறிப்பாக இந்தியாவை சேர்ந்த 6 விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் செய்திகள் பரப்பப்பட்டன. அந்த போலியான செய்தியை வைத்துக்கொண்டு “6 விமானங்கள் வீழ்த்தப்பட்டது மறந்து விட்டதா?” என்ற வகையில் ஹரிஷ் ரவூப் இந்தியாவையும் இந்திய ரசிகர்களையும் கலாய்த்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கோலி கோலி என்று கூச்சலிட்டு அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர்.
அதாவது 2022 டி20 உலகக் கோப்பையில் மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தானை பந்தாடிய விராட் கோலி இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அப்போட்டியில் ஹரிஷ் ரவூப்க்கு எதிராக நேராக விராட் கோலி அடித்த சிக்சர் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த சிங்கிள் ஷாட் என்று ஐசிசி பாராட்டியது. எனவே “2022 டி20 உலகக்கோப்பையில் உங்களை விராட் கோலி பொளந்தது மறந்து விட்டதா?” என்று ஹரிஸ் ரவூப்க்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.
இதையும் படிங்க: ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக முதல் சர்வதேச வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை – இதுதான் தரமான அடி
மேலும் கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளில் இந்தியா 7 தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளது. எனவே 7 – 0 என்ற கணக்கில் ஒருதலைபட்சமாக பாகிஸ்தானை ஓட விடும் இந்தியாவும் வம்பிழுக்காதீர்கள் என்றும் ஹரிஷ் ரவூப்க்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நெத்தியடி பதிலை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



