
உலகக்கோப்பை லீக் போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. இதில் முதல் இடத்தில் இந்தியாவும் மற்ற மூன்று அணிகளான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
நேற்றைய கடைசி லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதாலும், ஆஸ்திரேலிய அணி தோல்வி பெற்றதாலும் புள்ளி பட்டியலில் மாற்றம் நிகழ்ந்தது. அதன்படி இந்திய அணி முதல் இடத்திலும் ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்திற்கும் சென்றது.
புள்ளிவிவரத்தின்படி முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் வருகிற 9-ந் தேதி செவ்வாய்க்கிழமை அரையிறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
அதற்கு அடுத்து ஆஸ்திரேலிய அணியும், இங்கிலாந்து அணியும் 11 ஆம் தேதி மற்றொரு அரையிறுதி போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் லீக் போட்டியில் மழை காரணமாக விளையாடததால் இந்த அரை இறுதிப்போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.