வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரா வெற்றி! பாகிஸ்தானின் உலகசாதனையை சமன் செய்து இந்தியா அபாரம்

IND
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்ற வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளின் முடிவில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 0* என முன்னிலை வகிக்கிறது. அதை தொடர்ந்து இந்த தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டி வரும் பிப்ரவரி 11ஆம் தேதி துவங்க உள்ளது.

prasidh 1

- Advertisement -

முன்னதாக நேற்று நடைபெற்ற இந்த தொடரின் 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெஸ்ட்இண்டீஸ் அணியின் அபாரமான பந்து வீச்சால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தட்டுத் தடுமாறி 237/9 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 64 ரன்களும் கேஎல் ராகுல் 49 ரன்களும் எடுத்தனர்.

தொடரை கைப்பற்றிய இந்தியா:
இதை அடுத்து 238 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட்இண்டீஸ் முதல் போட்டியை போலவே மீண்டும் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறி வந்தது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் பெரிய ஸ்கோர் அடிக்க தவறியதால் 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் வெறும் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

SKY

இதன் வாயிலாக 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0* என கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இந்தியாவின் வெற்றிநடை:
இந்த ஒருநாள் தொடரை 2 – 0* என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மீண்டும் ஒரு ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக கடந்த 16 வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு ஒருநாள் தொடரில் கூட தோல்வி அடையாமல் இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது.

ஆம் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் அவ்வப்போது பை லேட்டரல் தொடர்களில் மோதி வருகின்றன. அதில் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா ஒரு ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது. அதேபோல் கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு நடந்த ஒரு ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்திருந்தது.

- Advertisement -

உலகசாதனை சமன்:
அதன்பின் கடந்த 2007 முதல் தற்போது வரை இந்த 2 அணிகளும் மோதிய 11 ஒருநாள் தொடர்களிலும் ஒரு முறை கூட தோல்வி அடையாத இந்தியா 11 தொடர்களையும் வென்று சாதனை படைத்துள்ளது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக ஒருநாள் தொடர்களை வென்ற அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை இந்தியா தற்போது சமன் செய்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ஒருநாள் தொடரை வென்ற அணிகளின் பட்டியல் இதோ:

pollard 1

1. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக : 11* தொடரில் வெற்றிகள் (2007 – 2022)
2. பாகிஸ்தான் – ஜிம்பாப்வே அணிக்கு எதிராக : 11 தொடர் வெற்றிகள் (1996 – 2022)
3. பாகிஸ்தான் – வெஸ்ட்இண்டீஸ்அணிக்கு எதிராக : 9 வெற்றிகள் (1999 – 2017)
4. இந்தியா – இலங்கைக்கு எதிராக : 9 தொடர் வெற்றிகள் (2007 – 2021)

மொத்தமாக கடந்த 1983 முதல் தற்போது வரை இந்த 2 அணிகளும் வரலாற்றில் இதுவரை 22 ஒருநாள் தொடர்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 14 ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வலுவான அணியாக திகழ்கிறது. மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் 8 தொடர்களில் மட்டும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement