32/4 டூ 203/5.. இங்கிலாந்தை முந்தி 25 வருட புதிய உலக சாதனை படைத்த இந்தியா.. 6வது கோப்பை வெல்லுமா?

IND vs RSA U19 2
- Advertisement -

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற வரும் ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டிக்கு நடப்பு சாம்பியன் இந்தியா முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. உதய் சஹரன் தலைமையில் இத்தொடரில் விளையாடும் இந்தியா லீக் மற்றும் சூப்பர் 6 சுற்றில் சந்தித்த அனைத்து அணிகளையும் தோற்கடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

அந்த நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி பெனோனி நகரில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொண்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா போராடி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக லஹன்-டிரே பிரிட்டோரியஸ் 76 ரிச்சர்ட் செலீட்வேன் 64 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

சாதனை சேசிங்:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக முசீர் கான் 2, ராஜ் லிம்பானி 3 விக்கெட்களை எடுத்தனர். அதை தொடர்ந்து சேசிங் செய்த இந்திய அணிக்கு ஆதர்ஷ் சிங் 0, அர்சின் குல்கர்ணி 12, முஷீர் கான் 4, ப்ரியான்சு மோலியா 5 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் 32/4 என சரிந்த இந்தியா வழக்கம் போல நாக் அவுட்டில் சொதப்பி தோற்கும் என்று ரசிகர்கள் கவலையடைந்தனர்.

இருப்பினும் அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் உதய் சகரன் மற்றும் சச்சின் தாஸ் ஆகியோர் நிதானமாக விளையாடி சரிவை சரி செய்தனர். குறிப்பாக 12வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் 43 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று தென்னாப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்து 171 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய இந்திய அணியை தூக்கி நிறுத்திய போது சச்சின் தாஸ் 96 (95) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் நிதானமாக விளையாடிய உதய் 81 ரன்களில் ரன் அவுட்டாக அடுத்து வந்த ஆரவல்லி அவினாஷ் 10, முருகன் அபிஷேக் 0 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் ராஜ் லிம்பானி 13* (4) ரன்கள் அடித்து ஃபினிஷிங் கொடுத்தார். அதன் காரணமாக 48.5 ஓவரில் 248/8 ரன்கள் எடுத்த இந்தியா வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அண்டர்-19 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு வரலாற்றில் 9வது முறையாகவும் தொடர்ந்து 5வது முறையாகவும் தகுதி பெற்று சாதனை படைத்தது.

மேலும் இதன் வாயிலாக அண்டர்-19 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு நாக் அவுட் போட்டியில் அதிகபட்ச இலக்கை (245 ரன்கள்) வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற இங்கிலாந்தின் 25 வருட சாதனையை உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1998 ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக 242 ரன்களை இங்கிலாந்து வெற்றிகரமாக சேசிங் செய்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: எதிர்காலத்தில் கேப்டனாக மாறும் திறமை அவரிடம் இருக்கு.. அவருக்கு ஏன் டெஸ்ட்ல சேன்ஸ் தரல – பிராட் ஹாக் கருத்து

மறுபுறம் ட்ரிஷன் லஸ், மபாகா தலா 3 விக்கெட்கள் எடுத்தும் தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் பரிதாபமாக தோற்று வெளியேறியது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மோதும் இரண்டாவது அரையிறுதியில் வெல்லும் அணியுடன் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் 6வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement