எதிர்காலத்தில் கேப்டனாக மாறும் திறமை அவரிடம் இருக்கு.. அவருக்கு ஏன் டெஸ்ட்ல சேன்ஸ் தரல – பிராட் ஹாக் கருத்து

Hogg
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. தற்போது வரை நடைபெற்ற முடிந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இன்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில் அனுபவ வீரர்களான விராட் கோலி, முகமது ஷமி ஆகியோர் இல்லாத வேளையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக தற்போது இந்திய அணி சற்று பலவீனமாகவே காணப்படுகிறது.

அதேபோன்று தற்போதைய அணியில் விளையாடும் ஒரு சில வீரர்களின் மோசமான பேட்டிங் பார்ம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இளம் வீரரான திலக் வர்மாவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியினருடன் பயணித்திருந்தேன். அப்போது திலக் வர்மா உடனும் கொஞ்ச நேரம் செலவிட்டேன். அவர் ஒரு அற்புதமான வீரர். அவருடைய கரியரில் டெஸ்ட் ரன்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரை டெஸ்ட் தொடரில் ஏன் தேர்வு செய்யவில்லை? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இதையும் படிங்க : 281 ரன்ஸ்.. தங்களை மதிக்காத தெ.ஆ அணியை தூளாக்கிய நியூஸிலாந்து.. 30 வருட மாபெரும் சாதனை வெற்றி

ஏனெனில் அவரால் எதிர்கால இந்திய அணிக்கு கேப்டனாக கூட இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஏற்கனவே ஷ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பால் பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் வேளையில் திலக் வர்மாவிற்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கலாம் எனவும் பிராட் ஹாக் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement