WTC Final : இந்திய ரசிகர்களே சோகமான செய்தி என்னானா, 4வது நாள் உணவு இடைவெளியில் டிகே சோகமான பேட்டி

Rohit Sharma Dinesh Karthik
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரிலியாவின் தரமான பந்து வீச்சில் ஃபைனலில் சொதப்பி வெறும் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிலும் ரோகித் சர்மா 15, கில் 13, விராட் கோலி 14, புஜாரா 14 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 71/4 என சரிந்த இந்தியாவை ரவீந்திர ஜடேஜா 48, ரகானே 89, சர்துல் தாக்கூர் 51 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போராடி முக்கிய ரன்களை எடுத்து ஃபாலோ ஆனை தவிர்க்க உதவிய நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 2வது நாள் முடிவில் 124/4 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

டிகே சோகம்:
டேவிட் வார்னர் 1, கவாஜா 13, ஸ்மித் 34, ஹெட் 18 என முக்கிய வீரர்களை குறைந்த ரன்களுக்கு அவுட்டாக்கி போராடிய இந்தியா இன்று துவங்கிய 4வது நாளில் மார்னஸ் லபுஸ்ஷேனை 41 ரன்களில் அவுட்டாக்கி நங்கூரத்தை போட முயன்ற கேமரூன் கிரீனை 25 ரன்களில் காலி செய்தது. ஆனாலும் உணவு இடைவெளியில் 201/6 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா 374 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சாதாரணமாகவே டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்ஸில் 150 ரன்கள் செய்வது கடினமாக பார்க்கப்படும் நிலையில் இப்போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் அதிகபட்சமாக 1902ஆம் ஆண்டு 263 ரன்கள் தான் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட இலக்காகும்.

எனவே 400க்கும் மேற்பட்ட இலக்கை ஆஸ்திரேலியா நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்போட்டியில் இந்தியா வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஓவல் பிட்ச்சில் பவுன்ஸ் உயரம் குறைந்து வருவதால் அதிக எல்பிடபிள்யூ ஏற்படும் என்று தெரிவிக்கும் தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியா நிர்ணயிக்கும் இலக்கை இந்தியா சேசிங் செய்வது கடினம் என்பதால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இப்போட்டியில் வர்ணனையாளராக செயல்படும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வெல்லும் என்று நான் நினைக்கவில்லை. இது இந்திய ரசிகர்களுக்கு சோகமான செய்தி என்பதை நான் அறிவேன். நானும் நம்பிக்கையை இழக்கவில்லை ஆனால் தற்போது பிட்ச் மாறி வருவதால் நீங்கள் 60 – 70 ரன்கள் எடுத்து நன்கு செட்டிலாகி பேட்டிங் செய்தாலும் எதையுமே செய்து எதிர்கொள்ள முடியாத பந்துகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த அனைத்து சரிவுக்கும் காரணம் 2, 3 நாட்களில் நடந்ததல்ல. முதல் நாளில் செய்த சொதப்பலாகும். அதாவது உண்மையை சொல்ல வேண்டுமெனில் 200 ரன்கள் என்பதே அதிகமாக பார்க்கப்படும் இந்த பிட்ச்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்து விட்டது”

“இந்தியாவும் முடிந்தளவுக்கு போராடும் பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இருப்பினும் 3வது நாள் முடிவில் 123/4 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியாவை நீங்கள் 350 ரன்களுக்கு கட்டுப்படுத்தினாலும் இந்த பிட்ச்சில் வெற்றிகரமாக சேசிங் செய்யக்கூடிய ரன்களை விட 100 ரன்கள் உங்களுக்கு அதிகமாக இலக்காக இருக்கும். ஏனெனில் தற்போது பிட்ச்சில் பந்துகள் மிகவும் கீழே வருவதால் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாக அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

அதாவது ஓவல் மைதானத்தில் எப்போதுமே கடைசி 2 நாட்கள் ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அந்த வகையில் இதுவரை ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் அஸ்வின் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்திகிறது. மறுபுறம் நேதன் லயன் இந்தியாவை அச்சுறுத்துவதற்கு தேவையான இலக்கைஆஸ்திரேலியா எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement